குன்னூர்:குன்னூரில் நடந்த புற்றுநோய் பரிசோதனை முகாமில், 376 பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.குன்னூர் லயன்ஸ் சங்கம் மற்றும் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், புற்று நோய்க்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம், பழனியப்பா எஸ்டேட் மருத்துவமனை, தூதூர்மட்டம் மற்றும் குன்னூரில் நடந்தது.பழனியப்பா எஸ்டேட் மருத்துவமனையில் 140 பெண்களுக்கும், தூதூர்மட்டத்தில் 56 பெண்களுக்கும், குன்னூர் லாலி மருத்துவமனையில் நேற்று நடந்த புற்றுநோய்க்கான பரிசோதனை முகாமில் 180 பெண்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் பங்கேற்ற பெண்களுக்கு, டாக்டர் உரிய ஆலோசனைகளை வழங்கினர்.முகாமுக்கான ஏற்பாடுகளை, குன்னூர் லயன்ஸ் கிளப் சார்பில் தலைவர் கிஷோர் மேகா பாப்பானி, செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.