கூடலூர்: கூடலூர் நகரில் உள்ள கடையில் நுழைந்த மரநாய் குட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.கூடலூர் நகரிலுள்ள பெட்ரோல் பங்கு எதிரேயுள்ள ஒரு கடையில் இரவு 8:00 மணிக்கு, மூன்று நாய் குட்டிகள் உலா வருவதை சில பார்த்துள்ளனர். இதனால், கடைக்காரர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த கூடலூர் வன பாதுகாப்பாளர் காளைராஜன், நெலாகோட்டை வனவர் செல்வராஜ் மற்றும் வன ஊழியர்கள், கடையினுள் இருந்த குட்டியை ஆய்வு செய்ததில், அவைகள் மரநாய் குட்டி என தெரிய வந்தது.அந்த மூன்று குட்டிகளையும் ஒன்றாகப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், அவை அவர்கள் கையில் சிக்காமல் அங்கிருந்த துளையினுள் சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வர வில்லை. "குட்டிகள் மீண்டும் அப்பகுதிக்கு வந்தால் தகவல் தர வேண்டும்' என கடைக்காரரிடம் வனத்துறையினர் அறிவுறுத்தினர். அப்பகுதியில், மக்கள் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.