ஊட்டி:கோத்தகிரியில், வரும் 23ம் தேதி சமையல் காஸ் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், நுகர்வோர்கள், தங்களின் குறைகளை மனு வாயிலாக தெரிவிக்கலாம்.நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நீலகிரியில் சமையல் காஸ் விநியோகம் சிறப்பாக செயல்படும் பொருட்டு, நுகர்வோர் குறைகளை களையும் நோக்கில், குறை தீர்க்கும் கூட்டம், வரும் 23ம் தேதி மதியம் 3.30 மணிக்கு, கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.கூட்டத்தில் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள், காஸ் முகவர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பங்கேற்கின்றனர். காஸ் விநியோகம் தொடர்பான குறைகளை, கூட்டத்தில் மனுக்கள் வாயிலாக எழுதிக் கொடுத்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.