மஞ்சூர்:கன்னேரி-ஊட்டி சாலையில் ஒரு மாதமாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட லாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கன்னேரியிலிருந்து ஊட்டி செல்லும் சாலையில், மேற்குநாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அருகில் லாரி ஒன்று கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளது. வானத்தில் பதிவு எண் மற்றும் பெயர்கள் எழுத்தப்பட்டிருந்தாலும், லாரி குறித்து உரிமை கொண்டாட யாரும் வரவில்லை. அப்படி ஒரு வேளை பழுதாகி நின்றாலும், கடந்த ஒரு மாதமாக சாலையில் இடையூறாக நிறுத்தப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கன்னேரி மந்தனை, ஒரகுட்டி கிராம மக்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளனர். "போலீசார் விரைந்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.