nilagiri district news | பழங்குடியினர் பள்ளிகளுக்கு விளையாட்டு போட்டி:வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.80 ஆயிரம் உபகரணங்கள் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினர் பள்ளிகளுக்கு விளையாட்டு போட்டி:வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.80 ஆயிரம் உபகரணங்கள்

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோத்தகிரி:நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் சார்பில், பழங்குடியினர் பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டி நடந்தது. மசினகுடி அருகே பொக்காபுரம் பகுதியில், இரண்டு நாட்கள் நடந்த இப்போட்டியில், கார்குடி, மாவனல்லா, பொக்காப்புரம், தொரப்பள்ளி, முக்கட்டி, தேவாலான, பொன்னானி, அய்யன்கொல்லி மற்றும் கப்பாலா ஆகிய பகுதிகளில் உள்ள பழங்குடியினர் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் மற்றும் தொடர் ஓட்டம் என, போட்டிகள் நடத்தப்பட்டன.
பேச்சு, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி என, அறிவுத்திறன் போட்டிகளும் தனித்தனியாக நடத்தப்பட்டன. பரிசளிப்பு விழாவிற்கு, நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க செயலாளர் ஆல்வாஸ் தலைமை வகித்தார். நாவா திட்ட மேலாளர் விஜயகுமார், கிராமக் கல்விக்குழு தலைவர் சிவகாமி முன்னிலை வகித்தனர். பழங்குடியினர் நல தனி அலுவலர் ராம்குமார், சீகூர் வனச்சரகர் செல்லதுரை, சிங்கார வனச்சரகர் ஞானதாஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
போட்டியில் பங்கேற்ற 9 பள்ளி மாணவ மாணவியருக்கும் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, இறகு பந்து, கேரம் போர்டு, சதுரங்கம் மற்றும் ரிங்பால் ஆகிய விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கான போட்டியில் பொக்காபுரம் பள்ளியை சேர்ந்த சித்தன் தலைமையிலான அணிக்கும், மாணவியருக்கான போட்டியில் கார்குடி பள்ளி பார்வதி தலைமையிலான அணிக்கும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. பள்ளிகளுக்கான சாம்பியன் பட்டத்தை பொக்காபுரம் பள்ளி தட்டி சென்றது. மாணவ, மாணவியருக்கு சத்துணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை "நாவா' திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துசாமி, ராஜேஷ்குமார், சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை