கோத்தகிரி:கோத்தகிரியில் பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்து, கட்சி கொடியேற்றினர். எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஜெ. பேரவை மாவட்ட பொரு ளாளர் விவேகானந்தன் இனிப்பு வழங்கினார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் கருப்பசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.* கோத்தகிரி கெட்டிக்கம்பையில் நடந்த விழாவுக்கு, கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தேவராஜ், ராஜ்குமார், லிங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இனிப்பு வழங்கப்பட்டது. சுற்றுப்புற பகுதிகளிலும் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.