nilagiri district news | பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு ஆலோசனை

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பந்தலூர்:பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி, பந்தலூர் அடுத்த எருமாடு பகுதியில் நடந்தது.பந்தலூர் பிரைட்பியூச்சர் அகாடமி, ஜே.சி.ஐ., பந்தலூர், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், இறை-அன்பு அறக்கட்டளை ஆகியன இணைந்து, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியை, எருமாடு அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடத்தியது.பள்ளி தலைமையாசிரியர் அனீபா தலைமை வகித்தார். இந்திராணி வரவேற்றார்.
பொதுத்தேர்வை எப்படி எதிர்கொள்வது, தேர்வு காலங்களில் உடல்நலத்தை பாதுகாப்பது எப்படி, பொதுத்தேர்வின் முக்கியத்துவம், அதிகாலை விழிப்பதன் அவசியம், இலக்கை தீர்மானித்தல், தெளிவான-அழகான கையெழுத்தின் பயன்கள் உள்ளிட்டவை குறித்து, அகாடமி தாளாளர் தனராஜ் விளக்கினார். அதிகாலை நேரத்தில் தியானம் செய்து, தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்ளவும், அறிவுறுத்தப்பட்டது.ஓய்வுபெற்ற ஆசிரியர் மணி, அறக்கட்டளை நிர்வாகிகள் லட்சுமணன், ஆறுமுகம், விஜயகுமார் உள்ளிட்டோர் பேசினர். ஜே.சி.ஐ., நிர்வாகிகள் மதுசூதனன், டாக்டர் பிஜூ, எலியாஸ், ரஞ்சன் விக்னேஷ், சிவபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கிரிஜா நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை