குன்னூர்:இரவு நேரத்தில் கூடுதல் போலீசாரை நியமித்து, ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என, வணிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.நீலகிரி மாவட்ட வணிகர் சங்க தலைவர் பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:கோத்தகிரியில் நடைக்கடை உரிமையாளர் மற்றும் ஊழியரை தாக்கி 100 சரவன் தங்க நகை மற்றும் 2.75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களை உடனடியாக பிடித்து, நகை- பணத்தை மீட்ட போலீசாருக்கு, கோத்தகிரி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு, சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும்.
வியாபாரிகள், தங்கள் கடைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். பணம் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் போது, போலீசார் உதவியை கோர வேண்டும். கடைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இரவு நேரத்தில் கூடுதல் போலீசாரை நியமித்து, ரோந்து பணியை போலீசார் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.