பொள்ளாச்சி:பல்வேறு இடங்களில் நகை திருடியதாக, மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்; அவர்களிடம் இருந்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டி பகுதியிலுள்ள மின்நகரில், நேற்று முன்தினம் லட்சுமி துர்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அங்கு, கைக்குழந்தையோடு சென்ற பெண் கும்பல், கும்பாபிஷேகத்துக்கு வந்திருந்த ஒரு பெண்ணிடம் இருந்த தாலிக்கொடியை, மெட்டல் கட்டரால் துண்டித்து, எடுத்துக் கொண்டு தலைமறைவானது. இதேபோல், பூலாங்கிணறு விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தின்போதும், இதேபோல் 5 பவுன் செயினை, கும்பல் பறித்து சென்றது.
இதுகுறித்து வந்த புகாரையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு போலீசார், கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.நேற்று காலை, பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் பகுதியில் கைக்குழந்தை மற்றும் பட்டுப்புடவை சகிதமாக வந்த மூன்று பெண்களை விசாரித்தபோது, அவர்கள் நகை திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மெட்டல் கட்டர் மற்றும் மூன்றரை பவுன் செயின் உள்ளிட்ட 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.விசாரணையில், பிடிபட்டவர்கள் திருப்பூர் காதர்பேட்டையை சேர்ந்த ரங்கசாமியின் மனைவி அய்யம்மாள்,48, அவரது மருமகள் பொன்மணி, 21, அக்காள் மகள் லட்சுமி, 20, கைக்குழந்தை என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.