சபரிமலை தற்காலிக தபால் நிலையம் மூடல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை:சபரிமலை சன்னிதானம் அருகே தற்காலிகமாக செயல்பட்டு வந்த, தபால் நிலையம் நேற்று மூடப்பட்டது.ஆண்டுதோறும், சபரிமலையில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இதில் பங்கேற்க, கோடிக்காணக்கான பக்தர்கள் வந்து செல்வர். மண்டல பூஜைகள் நவ.,15ம் தேதி துவங்கி, ஜனவரி 20ம் தேதி வரை நடைபெறும். கடந்த ஐம்பது ஆண்டுகளாக, இந்த பூஜை காலங்களில், தற்காலிக தபால் நிலையம், சன்னிதானம் அருகே செயல்பட்டு வருகிறது.
இ-மெயில், "எஸ்.எம்.எஸ்.,' போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் இருந்தே, பக்தர்கள் மற்றும் தேவஸ்தானம் உள்ளிட்ட பிற துறைகளுக்காக, தற்காலிக தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த தபால் நிலையத்தில் போடப்படும் கடிதங்களில், பதினெட்டாம் படி கொண்ட, சிறப்பு முத்திரை குத்தப்பட்டு, அனுப்பப்படும். இங்கு தபால் அதிகாரி, தபால்காரர், கிராமப்புற பணியாளர் என, மூன்று பேர் பணியில் இருப்பர். சன்னிதான தற்காலிக தபால் நிலையத்தில் இருந்து, தபால்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது.தினமும் சராசரியாக 180 பதிவுத் தபால்கள், ஸ்பீட் போஸ்ட்கள், மணியார்டர்களும், 200க்கும் மேற்பட்ட கடிதங்களும் வருவதாக, சபரிமலை தற்காலிக தபால் நிலைய அதிகாரி அனில்குமார் தெரிவித்தார். நேரில் வர முடியாதவர்கள், சுவாமி ஐயப்பனுக்காக அனுப்பும் திருமண அழைப்பிதழ்கள், வாஸ்து கடிதங்களை, அவரது சன்னிதானத்தில் சேர்க்கும் பணியை, தபால்துறை செய்துவருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.தற்காலிக தபால் நிலையம் மூடப்பட்டவுடன், பம்பையில் உள்ள தபால் நிலையம், சபரிமலைக்கு தபால் அனுப்பும் பணியை மேற்கொள்கிறது.கடந்த 2000-03ம் ஆண்டுகளில், சபரிமலை அரவணை டப்பாக்கள், தபால் அலுவலகம் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டன என்றார் பாலக்காடு சிவில் ஸ்டேஷன் தபால் நிலைய அதிகாரி கங்கமோகன்.
ஆண்டு தோறும், பூஜைகள் முடிந்தவுடன், அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கும் தேவஸ்வம் போர்டு, பல அரிய சேவைகளை செய்து தரும் தபால் துறைக்கு நன்றி தெரிவிக்க மட்டும் மறந்துவிடுகிறது என்று வேதனைப்படுகிறார், தேசிய விருது பெற்ற முன்னாள் தபால் துறை அதிகாரி ஹரிகரன். பதினெட்டு மலைகளை பிரதிபலிக்கும் 18ம் படியை தபால் தலையாக வெளியிட தேவஸ்வம் போர்டு முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.கேரள தபால் தலை சேகரிப்பு அமைப்பின் சார்பில் 1974ல், ஐயப்பன் படம் அச்சிடப்பட்ட, சிறப்பு தபால் உறையை, தபால் துறை வெளியிட்டு கவுரவித்துள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்