கோவை:வரும் கல்வியாண்டு முதல் பல்கலை மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் சைபர் செக்யூரிட்டி, இன்பர்மேஷன் செக்யூரிட்டி ஆகிய பாடப்பரிவுகளை துவக்க பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி) மற்றும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) உத்தரவிட்டுள்ளது. தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அதுசார்ந்த சைபர் பாதுகாப்பையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது இன்றைய சூழலில் அவசியம். சைபர் செக்யூரீட்டி மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டி முக்கியத்துவத்தை உணர்ந்து வருங்கால, கல்லூரி மாணவர்கள் இதில் விழிப்புடன் இருக்கவும், இத்துறை சார்ந்த வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்பதாலும் பல்கலை மற்றும் தொழில் நுட்ப கல்லூருகளில் பாடப்பிரிவுகள் துவக்கப்பட உள்ளது.
இதற்கான உத்தரவு கடிதத்தை கடந்த 16ம் தேதி பல்கலைக்கழக மானியக்குழு விரைவு தபால் மூலம் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலை துணை வேந்தர் ஜேம்ஸ் பிச்சை கூறியதாவது: ""சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டி ஆகிய பாடப்பரிவுகள் துவக்கவேண்டியது இன்றைய சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தது. சைபர் கிரைம் என்பது பல மடங்கு தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இணையாக அதிகரித்து வருவதை நாம் தினமும் காண்கிறோம். பாரதியார் பல்கலைக்கழகத்தில் இதுசார்ந்த பட்டப்படிப்புகளே துவங்கலாமா ? என்று ஆலோசித்து வருகிறோம். தற்போது பல்கலைக்கழக பரிந்துரையின் படி பாடத்திட்டங்கள் துவங்கும் பணிகள் கணிணி அறிவியல் துறை தலைவர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பல ஆலோசனைக்கு பிறகே பிற முடிவுகளை அறிவிக்க முடியும்இவ்வாறு துணைவேந்தர் ஜேம்ஸ்பிச்சை கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.