Advertisement
பஸ் விபத்து: நிவாரணம் கோரி மா.கம்யூ., உண்ணாவிரதம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜன
2013
02:20

கோத்தகிரி:கோத்தகிரியில், மினி பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.கோத்தகிரியில் இருந்து, கொட்டக்கம்பை கிராமத்துக்கு இயக்கப்பட்ட மினி பஸ், டிசம்பர் 3ம் தேதி விபத்துக்குள்ளானது; இதில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 30 பேருக்கும் மேல் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, இதுவரை அரசு சார்பில் நிவாரணம் வழங்கவில்லை.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, கோத்தகிரி மார்க்கெட் திடலில், மா.கம்யூ., சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் ரஞ்சித் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், "மினி பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும்; மினிபஸ் இயக்கத்தை முறைப்படுத்துவதுடன், கூடுதலாக அரசு பஸ்களை இயக்கவேண்டும்; கோத்தகிரி அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தவேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.மா.கம்யூ, மாவட்ட செயலாளர் பத்ரி, சி.ஐ.டி.யு., மாவட்ட பொதுச் செயலாளர் தியாகராஜன், இடைக்கமிட்டி உறுப்பினர் முத்து, கட்சி நிர்வாகிகள் தர்மராஜ், ராஜேந்திரன் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.