குன்னூர்:சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கியதாக, 12 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.குன்னூரில் நேற்று முன்தினம், சுமை தூக்கும் தொழிலாளி ஆறுமுகம் என்பவருக்கு, பூக்கடை உரிமையாளர்கள் சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆறுமுகத்தை, சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து, குன்னூர் போலீசில் ஆறுமுகம் புகார் அளித்தார். தாக்கியவர்களை கைது செய்ய கோரி, புறநகர் காவல்நிலையத்தையும் சிலர் முற்றுகையிட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் குன்னூர் டி.எஸ்.பி., மாடசாமி பேச்சுவார்த்தை நடத்தி, தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், தொழிலாளி ஆறுமுகத்தை தாக்கியதாக, 12 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.