குன்னூர்:குன்னூர் நுழைவுவாயிலில் உள்ள சாலை, வரும் 22ம் தேதி சீரமைக்கப்படவுள்ளது. அன்றைய தினம் போக்குவரத்து கட்டுபாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.குன்னூரில் நுழைவுவாயில் பகுதியில், ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்துள்ளது; இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க, குன்னூர் போலீசார், சாலை பாதுகாப்பு கூட்டத்தில் வலியுறுத்தி வந்தனர்; சாலையை சீரமைக்க எழுத்து பூர்வமாகவும், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், ரயில்வே லெவல் கிராசிங் பகுதியில்உள்ள 20 மீட்டர் அகலம் மற்றும் 20 மீட்டர் நீளமுள்ள சாலையை, 2 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சீரமைப்பு பணிகள், வரும் 22ம் தேதி மேற்கொள்ளப்படவுள்ளது.சீரமைப்பு பணியின்போது போக்குவரத்து கட்டுபாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, டி.எஸ்.பி., மாடசாமி மற்றும் ரயில்வே அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.