குன்னூர்:வெலிங்டன் விளையாட்டு மைதானம், ஒரு கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டு வருவதாக, கன்டோன்மென்ட் வாரிய துணை தலைவர் தெரிவித்தார். குன்னூர் வெலிங்டன் மைதானத்தில் சச்சின் கோப்பை 10 ஓவர் கிரிக்கெட் போட்டி, கடந்த மாதம் 19ம் தேதி துவங்கியது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மாநிலங்களை சேர்ந்த 63 அணிகள் பங்கேற்றன.இரவில் "பிளட் லைட்'டில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதிப் போட்டிக்கு பெங்களூர், கோவை அணிகள் தகுதி பெற்றன.
முதலில் ஆடிய கோவை அணி, 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய பெங்களூர் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பை தட்டி சென்றது.வெற்றி பெற்ற அணிக்கு, கன்டொன்மென்ட் வாரிய துணை தலைவர் பாரதியார், கோப்பையை வழங்கினார். அப்போது பேசிய அவர், ""வெலிங்டன் மைதானத்தை உலக தரத்துக்கு இணையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, முதற்கட்டமாக 40 லட்சம் செலவில் ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, மின் விளக்குகள் மற்றும் புல்தரை அமைக்கப்படும். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், வாரிய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்றார்.பரிசளிப்பு விழாவில், வாரிய உறுப்பினர்கள் வினோத்குமார், சிவகுமார், மார்டின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை டிங்கு, ஜேம்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.