குன்னூர்:குன்னூர் ரயில் நிலையத்தில் உள்ள காலியிடத்தில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்துவது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார், நேற்று ஆய்வு செய்தனர்.குன்னூரில் உள்ள சாலைகள் மிகவும் குறுகலானவை. வர்த்தக ரீதியாக பலர் இங்கு வரும் நிலையில், வாகன நெரிசல் உண்டாகிறது. மக்கள் தொகை பெருக்கம், வாகன எண்ணிக்கை அதிகரிப்பால், இங்குள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, பெருகியுள்ள வாகனங்களுக்கு ஏற்ப, அவற்றை நிறுத்த போதிய வசதிகள் இல்லை.
இந்நிலையில், குன்னூரின் நுழைவு வாயிலில் உள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான காலியிடத்தில், வாகனங்கள் நிறுத்திமிடம் ஏற்படுத்துவது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்வே துறைக்கு சொந்தமான காலியிடத்தை, டி.எஸ்.பி., மாடசாமி, போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ், போலீசார் மற்றும் ரயில்வே முதுநிலை பிரிவு பொறியாளர் கோவிந்தராஜ் ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர். ரயில்வே நிலையத்துக்கு உட்பட்ட காலியிடத்தில், வாகனங்களை நிறுத்த, ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளது.இந்த இடம் தற்போது, திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டால், சுகாதார சீர்கேடு ஏற்படுவது தடுக்கப்படும்.
ரயில்வே நிர்வாகமும், வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த ஒப்புக்கொண்டால், கட்டணம் செலுத்தி வாகனங்கள் நிறுத்தும் வசதி கிடைக்கும். முதற்கட்டமாக இரு சக்கர வாகனங்களும், பின்னர் இலகு ரக வாகனங்களும் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என, டி.எஸ்.பி., மாடசாமி தெரிவித்தார்.இதற்கிடையே, வெளியூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளால் ரயில் தண்டவாளம் பாதிக்கப்பட்டு வருவதால், இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அதன் பிறகு, அங்கு வேலி அமைக்கப்படும் எனவும், ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.