covai district news | சங்கத்தை பலப்படுத்தகூட்டத்தில் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சங்கத்தை பலப்படுத்தகூட்டத்தில் முடிவு

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை;நீதித்துறை ஊழியர் சங்க கோவை மாவட்ட கிளையை பலப்படுத்துவது அவசியம் என, பொதுக்குழு கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது. .தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. கோர்ட் வளாகத்தில் உள்ள சங்க கட்டடத்தில் நடந்த கூட்டத்துக்கு மாநிலத்தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் ராகுலன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சங்க வளர்ச்சி பற்றி பேசினார்.
கூட்டத்தில், கோவை மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தை பலப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது பற்றிய கருத்து பறிமாற்றம் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்டன. தொடர்ந்து, பணியில் இருந்து ஓய்வு பெற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ள நிர்வாகி விவேகானந்தன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். நிர்வாகக் குழுவில் புதிதாக காந்திகுமார், குமாரசாமி, தண்டபாணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிதாக அமைக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட கோர்ட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சங்கம் அமைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான கூட்டம் பிப்.,9ல் நடக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை