பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் ஊராட்சியில் செயல்படும் கால்நடை மருந்தகம் அடிப்படை வசதியின்றி உள்ளது.பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருந்தகம் செயல்படுகிறது. ஜமீன்ஊத்துக்குளி, கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், வக்கம்பாளையம், சிங்காநல்லூர் போன்ற பகுதிகளிலிருந்து மக்கள் தங்கள் கால்நடைகளை சிகிச்சைக்காக இங்கு கொண்டு செல்கின்றனர். இங்கு வாய்சப்பை நோய், காய்ச்சல் போன்ற அடிப்படை நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. மருந்தகத்தில் மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மருந்தகம் போதிய அடிப்படை வசதியின்றி செயல்படுகிறது. இங்கு டாக்டர், உதவியாளர் பணியாற்றி வருகின்றனர். ஆனால், குடிநீர், சாக்கடை, கழிப்பறை போன்ற வசதிகள் இல்லை. இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்," தற்காலிகமாக ஊராட்சி நிர்வாக கட்டடத்தில் கால்நடைத்துறை மருந்தகம் செயல்படுகிறது. ஊராட்சி நிர்வாகத்தினரிடம் சொந்த கட்டடத்திற்கு இடம் கேட்கப்பட்டுள்ளது', என்றார்.சிங்காநல்லூர் ஊராட்சி தலைவர் ரமேஷ் கூறுகையில்,""சிங்காநல்லூரில் இயங்கி வரும் மருந்தகத்தை இடம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று ஊராட்சியின் மைய பகுதியில் சுமார் 15 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடைத்துறையினர் ஆய்வு செய்து அவர்களுக்கு திருப்தியளிக்கும் பொருட்டு இடம் வழங்கப்படும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.