திருப்பூர்:திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகம் அமைக்கும் பணிக்கு, சிறப்பு அலுவலராக செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டதும், கோவை எஸ்.பி., கட்டுப்பாட்டிலிருந்த திருப்பூர் போலீஸ் துறைக்கு எஸ்.பி., நியமிக்கப்பட்டார். கடந்த 2011ல், முதல்வர் ஜெ., தலைமையில் நடந்த கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில், திருப்பூரில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஓராண்டு கழிந்து, அதற்கான அரசு உத்தரவு, கடந்த நவ.,மாதம் பிறப்பிக்கப்பட்டது. மாநகர போலீஸ் எல்லை, புதிய ஸ்டேஷன்கள், போலீசார் நியமனம் உள்ளிட்டவை குறித்த கருத்துருக்கள் அடிப்படையில், நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த மாதம் நடந்த போலீஸ் அதிகாரிகள் மாநாட்டிலும் விவாதிக்கப்பட்டது.தற்போது, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகம் அமைக்கும் பணிக்கு, சிறப்பு அலுவலரை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., செந்தாமரைக் கண்ணன், 49, சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், 1989ல் குரூப்-1 தேர்வு மூலம் போலீஸ் துறையில் சேர்ந்தார்; தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுந்தம் டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். பின், மதுரையிலும், எஸ்.பி. சி.ஐ.டி., பிரிவிலும் பணியாற்றினார்.வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்பிரிவு டி.எஸ்.பி.,யாக, அப்படையை வழி நடத்தினார். அதில் செய்த சிறப்பான பணியை அடுத்து, எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றார்.
அவருக்கு, 1997ல் ஐ.பி.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன்பின் திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எஸ்.பி.,யாக பணியாற்றினார்.அடையாறு மற்றும் வண்ணாரப்பேட்டையில் துணை கமிஷனராகவும், சென்னை ஆயுதப்படை போலீசிலும் பணியாற்றினார். இணை கமிஷனராக வட சென்னையில் பணியாற்றிய அவர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக, சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார்.தற்போது, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகம் அமைக்க சிறப்பு அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாளை (21ம் தேதி) திருப்பூரில் பொறுப்பேற்க உள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.