Advertisement
விரைவில் 16 நில அபகரிப்பு வழக்கு : சிறப்பு கோர்ட்தலைமை நீதிபதி பேச்சு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஊட்டி:""தமிழகத்தில் விரைவில் 16 நில அபகரிப்பு வழக்கு சிறப்பு கோர்ட் துவக்கப்படும்' என ஐகோர்ட் தலைமை நீதிபதி எலிபி தர்மாராவ் தெரிவித்தார்.ஊட்டியில் மாவட்ட நீதி மன்ற வளாகத்தில் நேற்று நில அபகரிப்பு வழக்கு சிறப்பு கோர்ட் துவக்கப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐகோர்ட் தலைமை நீதிபதி எலிபி தர்மாராவ்(பொறுப்பு ) பேசியதாவது: நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க கடந்த 2011ம் ஆண்டில் 25 நில அபகரிப்பு வழக்கு சிறப்பு கோர்ட் அமைக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதற்கட்டமாக கோவை, ஈரோடு, ராம்நாடு, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர் போன்ற இடங்களில் நில அபகரிப்பு வழக்கு சிறப்பு கோர்ட் துவக்கப்பட்டது. 9வது இடமாக ஊட்டியில் துவக்கப்பட்டது. மேலும், 16 நில அபகரிப்பு வழக்கு சிறப்பு கோர்ட் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மற்ற மாவட்டத்தை காட்டிலும் நில அபகரிப்பு வழக்கு ஊட்டியில் 5 வழக்கு தான் பதிவாகியுள்ளது. ஊட்டியில் தொழிலாளர் கோர்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு நீதிபதி எலிபிதர்மாராவ் பேசினார். மாவட்ட தலைமை நீதிபதிகள் பிரேம்குமார்(நீலகிரி) ஆதிநாதன்(கோவை), கணேசன்(திருப்பூர்), உதவி நீதிபதி நாராயணசாமி, நீலகிரி மாவட்ட பார் அசோசியேஷன் தலைவர் ஆனந்தன் டி.எஸ்.பி., அனிதா, மாவட்ட வன அலுவலர் ஹாசிஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.