கூடலூர்:சாலையில் லாரி பழுதாகி நின்றதால் தமிழகம் - கேரளா - கர்நாடகா மூன்று மாநிலங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணியிலிருந்து தமிழகம் - கேரளா எல்லையான கீழ் நாடுகாணி வரை சாலை பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. இந்நிலையில், நேற்று காலை 10.00 மணி கேரளாவிலிருந்து பாரம் ஏற்றி, மைசூரூ சென்ற லாரி ஒன்று, கீழ்நாடுகாணி அருகே பெரிய குழியில் சிக்கி பழுதாகி நின்றது. இதனால், பிற வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களிலிருந்து கூடலூர், ஊட்டி மற்றும் கர்நாடக மாநிலம் செல்லும் தனியார் வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் ஸ்தம்பித்து நின்றன. குடிநீர் கிடைக்காமல் பயணிகள், ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பல பயணிகள் கீழே இறங்கி நடந்தே சென்றனர். தேவாலா போலீசார் அப்பகுதிக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பழுதடைந்த லாரி சீரமைக்கும் பணி நேற்று மாலை 6.00 மணி வரை தொடர்ந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.