திருப்பூர்:நில மோசடி புகாரில் தொடர்புடைய காங்கயம் சார்பதிவாளருக்கு, சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது.திருப்பூர் மாவட்டம், காங்கயம், கணபதிபாளையத்தை சேர்ந்த முத்துசாமி மகன்கள் ராமசாமி மற்றும் லட்சுமணன். இவர்களுக்கு சொந்தமான 5.68 ஏக்கர் நிலத்தை, அதே ஊரை சேர்ந்த சிலர், திருப்பூரை சேர்ந்த அபிபுர் ரகுமானுக்கு போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தனர்.காங்கயம் சார்பதிவாளர் நசீர் அகமது, உரிய ஆவணங்களை சரிபார்க்காமல், பத்திரப்பதிவு செய்து உடந்தையாக இருந்ததாக அவர் மீதும்; நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தவர் மற்றும் வாங்கியவர், சாட்சி கையொப்பம் போட்டவர்கள் ஆகியோர் மீதும், திருப்பூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்தது தொடர்பாக அபிபுர் ரகுமான், சண்முகம், நாராயணசாமி, நாகராஜ் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த சார்பதிவாளர் நசீர் அகமதுவை போலீசார் தேடிவந்தனர்.
இதற்கிடையே, முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில், அவர் மனு செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்ற ஐகோர்ட், நசீர் அகமதுக்கு, "தினமும் காலை 10.00 மணிக்கு, திருப்பூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும்; இந்நடைமுறையை, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பின்பற்ற வேண்டும்,' என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. அதன்படி, அவர் நேற்று ஆஜாராகி, கையெழுத்திட்டார்.அரசு துறை அலுவலர் மீதான மோசடி புகார் குறித்து, திருப்பூர் மாவட்ட பதிவாளர் மற்றும் பத்திரப் பதிவு துறை ஐ.ஜி.,க்கு போலீசார் தகவல் அளித்தனர். மாவட்ட பதிவாளர் அலுவலகம் மூலமும், இத்தகவல் பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.,க்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.