சேலம்:
அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி
அளிக்கப்படுகிறது.தமிழகத்தில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்
தொடக்கக்கல்வித்துறையின் கீழும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்
பள்ளிக்கல்வித்துறையின் கீழும் செயல்பட்டு வருகிறது. இவற்றில் காலியாக
இருந்த இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு
மூலம், 20 ஆயிரம் பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் துவக்க
மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அனைவருக்கும்
கல்வி இயக்ககத்தின் சார்பில், ஜனவரி, 21ம் தேதி முதல், 23ம் தேதி வரை,
மூன்று நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் ஏ.பி.எல்., கல்வி முறை
குறித்தும், அரசு பள்ளிகளில் உள்ள பணிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும்
பயிற்சியளிக்கப்படுகிறது.உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியில்
சேர்ந்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி
இயக்ககம் சார்பில், ஜனவரி, 26, 27 ஆகிய தேதிகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில் பாடம் நடத்தப்படுவது குறித்து, பாடவாரியாக பயிற்சியும், அரசு
ஆசிரியர்களுக்கான பணிகளும் பயிற்சியாக வழங்கப்படுகிறது.சேலம் மாவட்டத்தில்
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி, இன்று சேலம்
சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அனைவருக்கும்
இடைநிலைக்கல்வி இயக்கக அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன
ஆசிரியர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.