ஆத்தூர்:
ஆத்தூர் பகுதியில், பருவ மழை பொய்த்து போனதோடு, நிலத்தடி நீர் மட்டம்
குறைந்ததால், காய்கறி சாகுபடி மகசூல் கடுமையாக பாதித்துள்ளது. அதனால்,
விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.ஆத்தூர், பைத்தூர், நரசிங்கபுரம்,
புங்கவாடி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், காட்டுக்கோட்டை, வீரகனூர்,
கெங்கவல்லி, தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், பருத்தி, மக்காச்சோளம்,
மஞ்சள், மரவள்ளி, வாழை மட்டுமின்றி, காய்கறி பயிர்கள் அதிகளவில் சாகுபடி
செய்யப்படுகிறது.
இங்கு விளைவிக்கப்படும் கத்திரிக்காய், வெண்டை,
மிளகாய், தக்காளி, வெங்காயம், பீட்ரூட், முட்டை கோஸ், காலிஃப்ளவர்,
பாகற்காய், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள், தலைவாசல் தினசரி காய்கறி
மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆத்தூர் பகுதியில், பருவ மழை
பொய்த்து போனதால், விவசாய கிணறு, ஆழ்துளை கிணறுகளில், நிலத்தடி நீர் மட்டம்
வெகுவாக குறைந்து வருகிறது. அதனால், காய்கறி பயிர்களுக்கு கூட தண்ணீர்
பாய்ச்ச முடியாத நிலையில், விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.இந்நிலையில்,
ஆத்தூர் பைத்தூர் மான் குட்டை, புங்கவாடி கிராமங்களில், 50 ஏக்கருக்கு மேல்
பயிர் செய்துள்ள, கத்திரிக் காய், மிளகாய் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச
முடியவில்லை. அதனால், கத்திரிக் காய்கள், கசப்பு தன்மை ஏற்பட்டு, சாப்பிட
முடியாததால், செடிகளில் விடப்பட்ட கத்திரிக் காய்கள், பழமாகவும், அழுகிய
நிலையில் உள்ளன.அதேபோல், மிளகாய் செடிகள் வளர்ச்சியின்றி, "பிஞ்சு'
மிளகாய்கள் பழமாகவும், வாடி, வதங்கி வருகிறது. காய்கறி உள்ளிட்ட பயிர்கள்,
தண்ணீரில்லாமலும், கடும் வெயிலால் காய்ந்து கருவதால், விவசாயிகள் கடும்
வேதனையடைந்துள்ளனர்.ஆத்தூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:பருவ மழை
இல்லாததால், கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து வருவதோடு, வெயில் தாக்கம்
கடுமையாக உள்ளது. இதில், ஆத்தூர் பகுதியில், 100 ஏக்கருக்கு மேல் பயிர்
செய்துள்ள கத்திரிக்காய் செடிகளுக்கு, தண்ணீர் இல்லாமல் காய்கள் கசப்பு
தன்மை ஏற்படுகிறது.இந்த காய்கள் அறுவடை செய்து, விற்க முடியாததால்,
அக்காய்கள் செடிகளில் பழமாக பழுத்து தொங்குகிறது. மேலும், கடும்
பனிப்பொழிவில், காய்கறி உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளதால், காய்கறிக்கு
தட்டுப்பாடு, விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
காய்கறி பயிர் சாகுபடி செய்த, விவசாயிகளுக்கு, தமிழக அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.