ஈரோடு:
ஈரோடு சுண்ணாம்பு ஓடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், இரவு
நேரங்களில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து, சாயக்கழிவு நீர்
திறந்துவிடுவதால் அப்பகுதியினர் பல்வேறு மறைமுக நோய்க்கு ஆளாகி
வருகின்றனர்.நீர் நிலைகள் மாசு ஏற்படுத்தும் சாயப்பட்டறைகள், தோல் ஆலைகளை
செயல்படுத்தக்கூடாது என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி
ஈரோடு மாவட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நல்லாசியுடன்
பல்வேறு இடங்களில் சாயப்பட்டறைகள் மறைமுகமாக இயங்கி வருகின்றன. இதனால்,
நிலத்தடி நீர் மாசுபட்டு, ஈரோடு மாவட்ட பொதுமக்கள் பல்வேறு மறைமுக நோய்க்கு
ஆளாகி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், பவானி சாலையில் சுண்ணாம்பு ஓடை
அருகே பல்வேறு கிராமங்கள் உள்ளன. சூரியம்பாளையம், இந்திராபுரம்,
தெய்வபுரம், கருப்பண்ண கவுண்டன்புதூர், பாலக்காட்டூர், வீரப்பாண்டியூர்,
வீரபாண்டிபுதூர், சுண்ணாம்பு ஓடை, தண்ணீர்பந்தல் பாளையம், அமராவதி நகர்,
ஆர்.என்., புதூர் உள்ளிட்ட பகுதிகள் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட
பகுதியாகும்.இப்பகுதியில், 25க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் மற்றும்
சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன.இந்நிறுவனங்கள் நேரடியாகவும்,
மறைமுகமாகவும் சாயக்கழிவு நீரை இரவு நேரங்களில், நீரோடைகளில் திறந்து
விடுகின்றனர். தினமும் அதிகாலை ஒன்று முதல், நான்கு மணிக்குள் இத்தகைய
வேலைகள் அரங்கேறுகின்றன. இதனால் அப்பகுதியினர் பல்வேறு மறைமுக நோய்க்கு
ஆளாகி வருகின்றனர்.அதிக நெடி கொண்ட சாயக்கழிவு நீரால், அப்பகுதியினர்
மூச்சுவிட சிரமப்பட்டு வருகின்றனர். குடியிருப்புகளில் வீடுகளின் நிலவுகள்,
இரும்பு ஜன்னல் மற்றும் கதவுகள் மாசடைந்த காற்றல், துருப்பிடித்து
காணப்படுகிறது.அப்பகுதியினர் சிலர் கூறியதாவது:நீதிமன்ற உத்தரவை மதிக்காமல்
தெருக்களில் அப்பட்டமாக சாயக்கழிவு நீர் இரவு நேரங்களில் திறந்து
விடுகின்றனர். ஆசிட் வாடையுடன், அதிக நெடியுடன் சாயக்கழிவு நீர்
வெளியேற்றம் இப்பகுதியில் அதிகரித்துள்ளது.இதனால் இரவு நேரங்களில் தூங்க
கூட முடிவதில்லை. கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. பெண்கள் மற்றும்
குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெண்கள் காலில் அணியும்
வெள்ளி கொழுசு கூட கருத்து விடுகிறது. அந்தளவுக்கு இப்பகுதியில்
சாயக்கழிவால் மாசடைந்துள்ளது.இப்பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினால்
எங்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. இப்பகுதியில் குழந்தைகள் பல்வேறு தொற்று
நோய்க்கு ஆளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.