சென்னிமலை:
தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, சென்னிமலை ஒன்றிய, நகர
தே.மு.தி.க., சார்பில் சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்த் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும், தமிழக அரசின்
மக்கள் விரோத போக்கை கண்டித்தும், தொடர் மின்வெட்டை சீரமைக்கக்கோரியும்
தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.,வினர் ஒன்றியம் வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தி
வருகின்றனர்.நேற்று சென்னிமலை ஒன்றியத்தில் நேற்று ஆர்ப்பாட்டம்
நடந்தது.எம்.எல்.ஏ., சந்திரகுமார் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட செயலாளர்
இமயம் சிவக்குமார் முன்னிலை வகித்தார். சென்னிமலை ஒன்றிய செயலாளர்
நந்தகுமார் வரவேற்றார். மாநில விவசாய பிரிவு மனோகரன், பேரூர் கழக செயலாளர்
ஜெகதீசன், ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கவேல், சரஸ்வதி, ராதிகாராமசாமி, உட்பட
பலர் பங்கேற்றனர்.தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை கண்டித்தும், சென்னிமலை
யூனியன் பாலதொழுவு குளத்தில் மரம் வெட்டுவதில் ஆளும் கட்சியினர் சின்டிகேட்
அமைத்து லட்சக்கணக்கான ரூபாய் வருவாயை அரசுக்கு இழப்பு செய்ததை
கண்டித்தும், கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க கோரியும் பலர்
பேசினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.