ஈரோடு:
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிப்பதுடன், போர்க்கால அடிப்டையில் வறட்சி
நிவாரணம் வேலைகளை அரசு தொடங்க வேண்டும், என இந்திய மக்கள் இயக்கம்
நல்லசாமி, அரசை கேட்டுக்கொண்டார்.தமிழகத்தில் கடந்த ஒராண்டுகளாக பருவமழை
பொய்த்துபோனதுடன், கடுமையான வெயில் காரணமாக, நீர் நிலைகள் வறண்டு போயின.
மேட்டூர் அணையில் தண்ணீர் வற்றியதால், சம்பா சாகுபடி காய்ந்து
வருகிறது.காவிரி நதிநீர் ஆணைய உத்தரவை மதித்து, காவிரியில் தண்ணீர் திறக்க
கர்நாடகா மறுத்தும், தாமதப்படுத்தி வருகிறது. அமராவதி, வைகை, பெரியாறு
அணைகளில், முதல்வர் ஆணையின் பேரில் தண்ணீர் திறக்கப்பட்டன.
விவசாயிகள்
விட்ட நாற்றினை, பறித்து நடுவதற்கு முன்பாக அணைகள் வற்றியதால் தண்ணீர்
நிறுத்தப்பட்டன. இதனால், நடப்பட்ட நாற்றுக்கள், காய்ந்துபோயின.
விவசாயத்துக்கு
அடுத்தபடியாக, மாநிலம் முழுவதுமாக உள்ள, 5 கோடி தென்னை மரங்கள், தண்ணீர்
கிடைக்காமல், வாடி உயிர் நீர் வேண்டி, அழியும் நிலையில்
காத்துக்கிடக்கிறது.மழையின்மையால் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளின்
தண்ணீர், கீழ் நோக்கி சென்றுவிட்டன. கரும்பும் நடப்பு பருவம் வெட்டப்பட்டு
விட்டால், இனி வரும் பருவத்தில் பயிரிட முடியாது என்பதாகிவிட்டது. விவசாயம்
கடுமையாக பாதிக்கப்பட்டதால், மனிதர்களுக்கான உணவுப்பொருட்கள் மட்டுமின்றி,
கால்நடைகளுக்கு தீவணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.தீவணம் கிடைக்காததால்,
மாடுகளை விற்கும் முடிவுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், மாடுகளை
வாங்க யாரும் முன்வராததால், மாடுகளின் விலை சரிவை சந்தித்துள்ளது. இதே
நிலை நீடித்தால், மாநிலத்தில் பால் உற்பத்தி கடும் பாதிப்பை
சந்திக்ககூடும்.
மழை பொய்த்துப்போய், தொடர் மின் வெட்டால், விவசாயம்,
தொழில்த்துறை, கால்நடை வளர்ப்பு, உணவு தாணியம் உற்பத்தி ஆகியவை
பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தை வறட்சி மாநிலமாக, மத்திய அரசு
அறிவிக்கவேண்டும்.போதுமான நிதியை வழங்கி, மாநில அரசு மூலமாக,
விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் வரட்சி நிவாரண வேலைகளைத்
தொடங்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது, என இந்திய மக்கள்
இயக்கம் கள அமைப்பாளர் நல்லசாமி அரசை கோரியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.