அடையாளமாகும் நகராட்சி கட்டிடம்குஷியில் துறையூர் அ.தி.மு.க.,வினர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

துறையூர்: நகராட்சி நிர்வாக அலுவலக புதிய கட்டிடம், அ.தி.மு.க., அரசுக்கு அடையாளமாக திகழும் என்பதால், துறையூரில் அக்கட்சியினர் குஷியாக உள்ளனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் ஜமீன்தார் ஆட்சி செய்ததற்கு அடையாளமாக கோவில், தெப்பக்குளம், பள்ளிக்கூடம் என மக்கள் பயன்பாட்டில் உள்ளதால், ஆண்டுகள் பல ஆனாலும், ஜமீன்தாரை ஊர் மக்கள் நினைவில் வைத்துள்ளனர். காங்கிரஸைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் முத்தையா, மேட்டூர் பெரியசாமியின் எளிமையான செயல்பாடுகளால், முத்தையாவின் நினைவாக முத்தையாபாளையம் என, ஒரு ஊருக்கு பெயர் சூட்டி மறக்காமல் உள்ளனர்.அடுத்து தி.மு.க.,வைச் சேர்ந்த து.ப.அழகமுத்து அரசு கொறடாவாக பணியாற்றி போது, துறையூரில் நகராட்சி, தாசில்தார் அலுவலகங்கள் அரசு மருத்துவமனை, பஸ்ஸ்டாண்ட், குடிநீர் மற்றும் பஸ் வசதி கிடைக்க செய்ததால், தி.மு.க.,வினர் மட்டுமின்றி, பொதுமக்களாலும் கவரப்பட்டு இன்றும் பேசப்படுகிறார்.

எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை துவக்கி தொகுதியில் தொடர்ந்து வென்றாலும் கூட, துறையூர் நகரில் தி.மு.க., முன்னணி பெற து.ப.அழகமுத்து ஏற்படுத்திய அடையாளங்கள், தி.மு.க.,வுக்கு இப்போதும் உதவகிறது.துறையூர் நகரில் அ.தி.மு.க.,வை அடையாளப்படுத்த, இதுவரை பெரிய அளவில் ஒன்றும் இல்லாதது, அக்கட்சி தொண்டர்களுக்கு குறையாக இருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மூன்று கோடி ரூபாயில் துறையூர் நகராட்சி நிர்வாக அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கி அறிவித்தார்.பெரம்பலூர் ரோட்டிலுள்ள குடிநீர் தொட்டிக்கு அருகில், புது கட்டிடம் கட்ட மண் பரிசோதனை செய்து, கட்டிட மாதிரி பரிசோதனை செய்து, கட்டிட மாதிரி வரைபடத்துக்கு சி.எம்.டி.ஏ., அலுவலகம் ஒப்புதல் தந்துள்ளது. அதன்படி, 6,731 சதுர அடி பரப்பில், 45 மீட்டர் நீளம், 14 மீட்டர் அகலத்தில் தரை தளம், இரண்டு மாடி என, மிக பிரமாண்டமாக புதிய நிர்வாக கட்டிடம் அமையும்.
இக்கட்டிடம் கட்ட, விரைவில் டெண்டர் கோரப்பட்டு கட்டுமான பணி துவங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கமிஷன் பிரச்சனையால் கட்டிடப் பணி கால தாமதமாகாமல் தரமாக அமைந்தால், அ.தி.மு.க., அரசின் அடையாளமாக இக்கட்டிடம் திகழும் எனக்கூறி, அக்கட்சி தொண்டர்கள் குஷியாக வலம் வருகின்றனர்.
துறையூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவும், சின்ன ஏரியை சுத்தம் செய்யவும், தொகுதி எம்.எல்.ஏ., இந்திராகாந்தி மற்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பணியை மேற்கொள்ள வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, அறிவிப்பு வெளியிட்டால், அ.தி.மு.க., எக்காலத்திலும் அழியாத அடையாளமாக இருக்கும்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்