முசிறி:
வடக்கு புதுப்பட்டி கிராமத்தில் நடந்த பொங்கல் விழாவில், எம்.எல்.ஏ.,
பூனாட்சி பங்கேற்று மரக்கன்றுகள் வழங்கினார்.முசிறி அருகேயுள்ள வடக்கு
புதுப்பட்டி கிராமத்தில், திருச்சி யுவகேந்திரா மற்றும் பைவ் ஸ்டார் இளைஞர்
நற்பணி மன்றத்தின் சார்பில் ஐந்தாம் ஆண்டு பொங்கல் தின விழா நடந்தது.
உழவர்
தின விழா, இளையோர் வார விழா, மரக்கன்றுகள் வழங்கும் விழா, திருக்குறள்
புத்தகம் வழங்கும் விழா, வழிகாட்டி பலகைகள் திறப்பு விழா ஆகிய ஐப்பெரும்
விழாவுக்கு, மன்ற செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். வார்டு உறுப்பினர்
பழனிசாமி, மன்ற ஆலோசகர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். மன்ற தலைவர் பிரபு
தலைமை வகித்தார். மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ., பூனாட்சி பங்கேற்று,
மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.
யூனியன்
கவுன்சிலர் சிங்காரவேலன் வழிகாட்டி பலகைகளை திறந்து வைத்தார். திருச்சி
யுவகேந்திரா மாவட்ட இளையோர் சுப்பிரமணியன் நோக்கவுரை ஆற்றினார். பஞ்சாயத்து
தலைவர் தங்கவேல், துணைத்தலைவர் ரமேஷ், செயலர் மணி ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினர்.விழாவில், விழா உறுப்பினர்கள் கோபி, மதியழகன், சோழன், மதிபால்,
ரமேஷ், வடிவேல், கிராம பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக
விழாவினையொட்டி மாணவ, மாணவிகளுக்கு நடந்த போட்டிகளில் வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசுகளும், அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை
நிகழ்ச்சியும் நடந்தது. தேசிய இளையோர் படை உறுப்பினர் விஜயலட்சுமி நன்றி
கூறினார்.
விழாவினை திருச்சி நேரு யுவகேந்திரா மற்றும் வடக்கு புதுப்பட்டி இளையோர் நற்பணி மன்ற இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.