DISTRICT NEWS | குறைதீர் கூட்டத்திலிருந்துவிவசாயிகள் வெளிநடப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் கூட்டத்திலிருந்துவிவசாயிகள் வெளிநடப்பு

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்: வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி, பெரம்பலூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலிருந்து, விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் தரேஷ்அஹமது தலைமையில் நடந்தது.
கூட்டம் துவங்கியவுடன், வறட்சியால் காய்ந்து போன பருத்தி உள்ளிட்ட பயிரை காட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் மழையின்மை காரணமாக, பயிர்கள் வாடி கருகிவிட்டது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமெனக்கோரி வெளிநடப்பு செய்கிறோம் எனக்கூறி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை தலைமையில், விவசாயிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், கூட்டுறவு பயிர்கடன் உட்பட விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.இதில் விவசாய சங்க பொறுப்பாளர்கள் ரமேஷ், ஜெயராமன், ராஜேந்திரன், வேல்முருகன், நீலகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றகோரி பேசினர். கூட்டத்தில் திடீரென விவசாயிகள் வெளிநடப்பு செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை