விவசாயி குறைதீர் கூட்டம்பல்வேறு பிரச்னைக்கு மனு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பெரம்பலூர்: மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு பிரச்னை தொடர்பாக விவசாயிகள் மனு அளித்தனர்.பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் தரேஷ் அஹமது தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:தமிழக முதல்வர் உத்தரவுப்படி, 30.67 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில், 859 ஏக்கர் புன்செய் நிலம் பாசன வசதி பெறும் வகையிலும், 19 கோடி ரூபாய் மதிப்பில் விசுவக்குடி புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. வெங்கலம் ஏரிக்கு கீழ் உள்ள, 421.41 ஏக்கர் ஆயக்கட்டுக்கு உறுதி செய்யப்பட்ட நீரும், நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதால், கிணற்று பாசனம் மூலம் கூடுதலாக, 169 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெற உள்ளன. இதுமட்டுமல்லாமல் மறைமுகமாக, 2,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்த நீரில் அதிக பரப்பளவு பாசனம் செய்வதற்காக, 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள், 1,400 ஏக்கரில் அமைக்க முதல்வர் உத்தரவிட்டதன்படி, தற்போது, 900 ஏக்கரில் சொட்டுநீர் பாசன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் செய்வதால் குறைந்த நீரில் இருமடங்கு பரப்பளவு சாகுபடி செய்ய இயலும்.விவசாயிகள் தினசரி வருமானம் பெற, காய்கறிகள் மற்றும் மலர்கள் சாகுபடி செய்வதற்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ், ஹெக்டாருக்கு 7,500 ரூபாய் முதல், 12 ஆயிரத்து, 500 ரூபாய் மதிப்பிலான இடுபொருட்கள் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. தேவைப்படும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் விவசாயிகள் ஆக்கிரமிப்பு அகற்றம், பாசன வசதி, உர வினியோகம், ஆலைகளில் கரும்புக்கு குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு பணம் அளிக்க கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், வேளாண் இணை இயக்குனர் சங்கரலிங்கம், கூட்டுறவு இணை பதிவாளர் உமாமகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்