தஞ்சாவூர்:
"குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள், அதற்கென உரிய
விண்ணப்பத்தினை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்' என, தஞ்சை
கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள
அறிக்கை:தஞ்சாவூரில் செயல்படும் சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களில்,
தற்போது குழந்தைகள் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனத்தினை செயல்படுத்திட
விரும்பும் நிறுவனத்தில், சுகாதாரப்பிரிவு நிரந்தரமாக செயல்பட வேண்டும்.
இதில் ஒரு டாக்டர், 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். குழந்தைகள்
தத்தெடுப்பு நிறுவனத்தில் நோய்வாய்ப்படும் குழந்தைகளை பராமரிக்க தேவையான
வசதிகளை உள்ளடக்கியதாக அந்நிறுவனம் செயல்பட வேண்டும்.குழந்தைகள்
தத்தெடுப்பு நிறுவனத்தில், போதிய பணியாளர்கள் பணிபுரிய வேண்டும்.
குழந்தைகள் தத்தெடுப்பு நிறுவனத்தில் சரியான உட்கட்டமைப்பு வசதி முழுமையாக
செய்து முடித்திருக்க வேண்டும். குழந்தைகளை பராமரித்த அனுபவம் இருக்க
வேண்டும். குழந்தைகள் தத்தெடுப்பு நிறுவனத்திற்கென சரியான நிதி ஆதாரத்துடன்
செயல்பட வேண்டும்.நிறுவனத்தின் கடந்த, மூன்று ஆண்டுகளுக்கான தணிக்கை, அரசு
தணிக்கையாளரிடம் பெறப்பட்டது மற்றும் ஆண்டறிக்கை இருக்க வேண்டும். இந்த
தகுதிகளை உள்ளடக்கிய நிறுவனங்கள், தங்களின் நிறுவனங்களின் விவரத்துடன்
புகைப்படங்களுடன் கூடிய கருத்துருவின், இரண்டு நகல்களை ஜனவரி மாதம், 31ம்
தேதிக்குள், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சேர்ப்பிக்க வேண்டும். மேலும்
விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், உழவர் சந்தை அருகில்,
நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர். டெலிஃபோன் எண் 04362 258501 என்ற
முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.மேலும் குழந்தைகளை தத்தெடுக்க விரும்புவோர்,
மாவட்ட சமூக நல அலுவலகத்தில், அதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.