புதுக்கோட்டை:
""மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மேற்கொண்டுவரும் விழிப்புணர்வு
நடவடிக்கைளின் மூலம், தமிழகத்தில் ஹெச்.ஐ.வி.,யின் தாக்கம், 1.13
சதவீதத்திலிருந்து, 0.25 சதவீதமாக குறைந்துள்ளது,'' என புதுக்கோட்டை
கலெக்டர் மனோகரன் தெரிவித்தார்.புதுக்கோட்டையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு
பிரச்சார கலை நிகழ்ச்சியை துவக்கிவைத்து, அவர் பேசியதாவது:மாநில எய்ட்ஸ்
கட்டுப்பாடு சங்கம் சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார கிராமிய கலை
நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் தொடர்ந்து, 50 நாட்கள் நடக்கிறது.
தெருக்கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம் போன்ற கிராமிய கலைகள்
மூலமாக, மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எய்ட்ஸ் குறித்த
விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.இதுதவிர பிரச்சார வாகனம்
மூலமாகவும் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
எய்ட்ஸ் மற்றும்
ஹெச்.ஐ.வி., தடுப்பு பணிகளில், தமிழகம் இதர மாநிலங்களுக்கு முன்மாதிரியாக
திகழ்கிறது. தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு
சங்கம் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம், தமிழகத்தில்
ஹெச்.ஐ.வி.,யின் தாக்கம், 1.13லிருந்து, 0.25 சதவீதமாக குறைந்துள்ளது. இதை
அறவே ஒழிக்கும் விதமாகத்தான், இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள்
தொடர்கிறது.இவ்வாறு கலெக்டர் பேசினார்.நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ்
கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் சகாயமேரி ரீட்டா, மருத்துவப் பணிகள் இணை
இயக்குனர் டாக்டர் ராமநாதன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் போஸ்கோராஜா
உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட எய்ட்ஸ் மற்றும் கட்டுப்பாடு சங்க
மேற்பார்வையாளர் வாருணிதேவி நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.