திருச்சி:
போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும், இன்று அங்கன்வாடி மையங்கள்
செயல்படாமல் இருந்தால், பணியாளர்கள் "சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என,
கலெக்டர் அறிவித்துள்ளார்.திருச்சி மாவட்டத்தில் இன்று மற்றும் 24ம்
தேதிகளில், 1,567 முகாம்களில், ஒன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட, 2
லட்சத்து, 55 ஆயிரத்து, 701 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணியில், 6,740 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட
உள்ளனர்.
போலியோ சொட்டு மருந்து முகாமை சிறப்பாக நடத்துவது தொடர்பாக
மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த, 9ம் தேதி கலெக்டர்
ஜெயஸ்ரீ தலைமையில் நடந்தது.இதையொட்டி, "ஞாயிறு கிழமையான, இன்று அனைத்து
அங்கன்வாடி மையங்களும் செயல்படும். அங்கன்வாடி மையம் செயல்படாமல்
இருந்தால், பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்படுவர்' என, கலெக்டர் ஜெயஸ்ரீ
அறிவித்துள்ளார்.ஸ்ரீரங்கம், குணசீலம், சமயபுரம், வயலூர் ஆகிய கோவில்கள்,
மசூதிகள், சர்ச்கள், பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஜங்ஷன், ரயில்வே ஸ்டேஷன்கள்,
விமான நிலையம், முக்கொம்பு உள்பட, 34 இடங்களிலும், பெற்றோர் குழந்தைகளை
அழைத்துவர இயலாத இடங்களுக்கு, 65 நடமாடும் குழுக்கள் மூலமும் போலியோ சொட்டு
மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்துடன்
இணைந்து, ரயில்களில் சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.மாநகராட்சி சார்பில், கடந்த 10ம் தேதி கமிஷனர் தண்டபாணி
தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகரப்பகுதியில், 223 மையங்கள் மூலம்,
81 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
மாநகராட்சி டாக்டர்கள் குழுவினர், இதர பணியாளர்களும் என, 950 பேர் ஈடுபட
உள்ளனர்.சிறப்பு முகாம் நடக்கும் நாட்களில் விடுபட்ட குழந்தைகளுக்கு
சுகாதார செவிலியர்கள் அடுத்த இரண்டு நாட்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு
செய்து, அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.