DISTRICT NEWS | போலீஸார் தீவிர விசாரணை பெங்களூரு இன்ஜினியர் மாயம்| Dinamalar

தமிழ்நாடு

போலீஸார் தீவிர விசாரணை பெங்களூரு இன்ஜினியர் மாயம்

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலத்தில் மாயமான, பெங்களூரு சாஃப்ட்வேர் இன்ஜினியரை, தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.பெங்களூருவை சேர்ந்தவர் சுரேஷ், 55, சாஃப்ட்வேர் இன்ஜினியர். இவர், பெங்களூருவில், தனியாக நிறுவனம் நடத்தி வருகிறார். இதில், ஏராளமான, மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். சுரேஷ், பல நிறுவனங்களுக்கு, ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.சேலம், நரசோதிப்பட்டியில், சுரேஷின் உறவினர் வீடு உள்ளது. ஜனவரி, 12ம் தேதி, பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சுரேஷ், அவரது உறவினர் வீட்டுக்கு வந்தார். தினமும் காலை நேரத்தில், நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம். ஜனவரி, 13ம் தேதி நடைபயிற்சிக்காக, வெளியில் சென்ற சுரேஷ், பின்னர், வீடு திரும்பவில்லை.அதிர்ச்சியடைந்த சுரேஷின் உறவினர்கள், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் மாஹாலி உத்தரவுபடி, சூரமங்கலம் மண்டல உதவி கமிஷனர் சந்திரசேகரன், தலைமையில், மூன்று பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீஸார், பெங்களூரு புறப்பட்டு, சுரேஷ் நடத்தி வரும் சாஃப்ட்வேர் நிறுவனம் மற்றும் பணியாற்றி வந்த நிறுவனங்கள் ஆகியவற்றில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாநகரில், இரண்டு தனிப்படை குழுவினர், மாயமான இன்ஜினியர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை