திருச்சூர்: மாற்று திறனாளிகள் மற்றும் முதியோருக்கு சிகிச்சை அளித்து வந்த, 35 கோடி ரூபாய் மதிப்பிலான, தனியார் மருத்துவமனை, கேரள அரசுக்கு, தானமாக வழங்கப்பட்டது.கேரளா, திருச்சூர் மாவட்டம், இரிஞ்ஞாலகுடாவைச் சேர்ந்தவர் என்.கே.ஜார்ஜ்; கட்டுமான பொறியாளரான இவர், தன் தந்தை பெயரில் அறக்கட்டளை ஒன்றை துவக்கி, அதன்மூலம், ஐந்து ஏக்கர் நிலத்தில், ஏழு தளங்களுடன் மருத்துவமனை ஒன்றை கட்டினார்.இந்த மருத்துவமனையில், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு, ஏழு ஆண்டுகளாக, இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, மாதம், 5 லட்சம் ரூபாயை, தன் சொந்த வருமானத்திலிருந்து ஜார்ஜ் வழங்கி வருகிறார்.மருத்துவமனையை மேலும் சிறப்பாக செயல்படுத்த விரும்பிய ஜார்ஜ், அதற்கு போதிய பணம் தன்னிடம் இல்லாததால், கேரள அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.இதுகுறித்த தகவல், மாநில சமூக நலத் துறை அமைச்சர், டாக்டர் எம்.கே.முனீரிடம் தெரிவிக்கப்பட்டு, அந்த துறையினர் தற்போது, மருத்துவமனையை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். மருத்துவமனையை, மாற்றுத் திறனாளிகளுக்கான மண்டல மருத்துவ மற்றும் மறுவாழ்வு மையமாக்க திட்டமிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.