பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுச்சேரி: பெட்ரோலுக்கு, "டாட்டா' காட்டும் வகையில், தண்ணீரில் பைக் இயக்கிய, காரைக்காலை சே ர்ந்தவரை, முதல்வர் ரங்கசாமி பாராட்டினார். காரைக்கால் வள்ளல் சீதக்காதி வீதியைச் சேர்ந்தவர், அமீது மரைக்காயர் 42, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்த இவர், பிரான்சில் டெக்னிக்கல் கோர்ஸ் படித்துள்ளார். பெட்ரோல் விலை அதிகரிப்பதால், தண்ணீரில் வாகனம் ஓடும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தார். ஐந்து ஆண்டுகளாக, பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார்.


"எலக்ட்ரோலைசிஸ்': இதில், "எலக்ட்ரோலைசிஸ்' தொழில் நுட்பத்தின் அடிப்படையில், "கரன்ட்' மூலம் தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனைத் பிரித்து, பெட்ரோல், டீசல், எரிவாயுவில் ஓடும் மோட்டார் வாகனங்களை தண்ணீரில் இயக்க முடியும் என கண்டுபிடித்தார். அமீது மரைக்காயர், நேற்று முன்தினம் மாலை, சட்டசபையில் முதல்வரைச் சந்தித்து, தன் தயாரிப்பு குறித்து, செயல் விளக்கம் அளித்தார். முதல்வர் ரங்கசாமி ஆவலுடன் கேட்டு மரைக்காயரைப் பாராட்டினார். முதல்வரின் பாராளுமன்ற செயலர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.


அமீது மரைக்காயர் கூறியதாவது:"எலக்ட்ரோலைசிஸ்' தொழில்நுட்பத்தின் அடிப்படையில், தண்ணீரில் வாகனங்களை இயக்குவது குறித்து, ஐந்து ஆண்டுகளாக ஆய்வு செய்தேன். இதில் இரு வகை உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருளுடன் தண்ணீர் கலந்து இயக்குவது ஒரு வகை. பெட்ரோல் டீசல் எதுவுமின்றி, முழுவதும் தண்ணீரில் இயக்குவது, மற்றொரு வகை.எரிபொருளுடன் தண்ணீரால் இயக்க, பைக்கிற்கு, 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய்வரை தனியாக செலவாகும். முழுவதும் தண்ணீரால் இயங்க, 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய்தனியாக செலவாகும்.எந்த வாகனத்திலும், என் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஓட்டும் போது, எந்த பிரச்னையும் இருக்காது. பெட்ரோல், டீசல், எரிவாயு உதவியோடு வாகனம் ஓட்டும் போது, சில, கி.மீ.,க்கு பின் மீண்டும் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டும். ஆனால் தண்ணீரில் இந்தப் பிரச்னை இருக்காது. குறைந்தது, ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை ஓட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (61)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணிமேகலை - ரோம் ,இத்தாலி
31-ஆக-201415:21:33 IST Report Abuse
மணிமேகலை  இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி .
Rate this:
Share this comment
Cancel
Surendran Sura - madurai,இந்தியா
20-மார்-201310:17:50 IST Report Abuse
Surendran Sura தயவுசெய்து இந்த நண்பரின் முகவரி மற்றும் மொபைல் நம்பர் எங்களுக்கு தேரிவிக்கவும்
Rate this:
Share this comment
Cancel
sivanesan, Doha, Qatar. - Doha,கத்தார்
20-மார்-201309:58:03 IST Report Abuse
sivanesan, Doha, Qatar. நண்பருக்கு வாழ்த்துக்கள், அதே சமயம், இந்த நிறைய பேர் சோதனை ஓட்டமாக செய்து விட்டார்கள். இது ஒன்றும் புதிது அல்ல.ஒன்று இரண்டு மாதங்கள் முன்பு இது போல் செய்தி வந்தது நினைவிருக்கலாம். USA நண்பர் சொன்னது போல் மின்சாரத்தை உற்பத்தி செய்து பின் அதை HHO ஆக மாற்றும் போது FUEL SAVING இருக்காது. ஆனால் மின்சாரம் இலவசமாக (காற்று & சன் மூலமாக ) கிடைத்தால் இந்த சிஸ்டம் பயன்படும்.
Rate this:
Share this comment
Cancel
S. Saravanan - Karaikudi,இந்தியா
20-மார்-201308:47:24 IST Report Abuse
S. Saravanan நல்ல முயற்சி, சாதாரணனுக்கும் சென்றடையுமானால். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Jana - Chennai,இந்தியா
24-ஜன-201309:10:18 IST Report Abuse
Jana பாராட்டுக்களால் முக்கி சிதறிவிடாமல் பொறுப்பாக செய்தால் ..முயற்சிக்கு பலன் உண்டு .. அது உண்மையாக இருக்கும் வரையில்.. ஆமா.. ஒரு பத்து ஆண்டுக்கு முன் ராமர் பிள்ளைன்னு ஒரு முலிகை பெட்ரோல் விங்ஞாநி இருந்தாரே .. யாராவது அவரை பார்தீங்களா ...
Rate this:
Share this comment
Cancel
Kanagaraj Sevu - Mannargudi,இந்தியா
24-ஜன-201308:38:26 IST Report Abuse
Kanagaraj Sevu வாழ்த்துக்கள். மேன்மேலும் வளர்க. சேவு கனகராஜ் மன்னார்குடி
Rate this:
Share this comment
Cancel
vithyaarthi - india,இந்தியா
23-ஜன-201311:38:42 IST Report Abuse
vithyaarthi இனி பெட்ரோல் விலை குறைஞ்சிடும் .
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Prakash - Thennamanadu,இந்தியா
23-ஜன-201309:28:35 IST Report Abuse
Selvaraj Prakash முயற்சி செய்யுங்கள் முயற்சிப்போரை ஊக்கப்படுத்துங்கள் நண்பருக்கு, வீண் விளம்பரம் வேண்டாமே நல்ல முயற்சி... பலர் கைவிட்ட ஆய்வு... முற்றிலும் பாதுகாப்பெனில் அரசிடம் கொண்டுசெல்லுங்கள். இன்று உம்முடையது நாளை வேறொருவருடையதாகிவிடும் முன்னரே அனுமதி பெற்று விரைவாக கண்டுபிடிப்புக்கு காப்பீடு பெறுங்கள்... (ஹைட்ரஜன் விரைவாகவும் வேகமாகவும் பிரியுமே அதிக அழுத்தமுடன் அளவுக்கு அதிகமானால்... நண்பரே, முழு பாதுகாப்பான கண்டுபிடிப்பெனில் உலகம் உம்மை போற்றும். உம்முடைய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்)
Rate this:
Share this comment
Cancel
thiru - Chennai,இந்தியா
23-ஜன-201308:34:48 IST Report Abuse
thiru ரிலையன்ஸ் அதிபர் இதை அனுமதிக்க மாட்டார் ... பெட்ரோல் டீஸல் வருமானம் போகுமே...
Rate this:
Share this comment
Cancel
ramalingam - chennai,இந்தியா
23-ஜன-201305:30:14 IST Report Abuse
ramalingam பெட்ரோல், டீஸல் பொருட்களின் மீது அளவுக்கு அதிகமான வரிகளை சுமத்தி மக்களின் வருமானத்தை சுரண்டி எடுக்கும் அரசு இதை வரவேற்காது. அனைவரும் தண்ணீரிலே வாகனத்தை இயக்கினால் அரசுக்கு வருமனாம் என்பது அடியோடு நின்றுவிடும். ஆனால் மக்களுக்கு மிகவும் பயனுள்ள இந்த எரிசக்தி முறையை பயன்படுத்த அரசு ஆவன செய்தல் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்