Karunanidhi wrote a letter overon destroy Hindu temple by Srilanka | இந்து கோவில்களை இடிக்கிறது இலங்கை : தடுக்க கருணாநிதி கடிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்து கோவில்களை இடிக்கிறது இலங்கை : தடுக்க கருணாநிதி கடிதம்

Added : ஜன 21, 2013 | கருத்துகள் (284)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Karunanidhi wrote a letter overon destroy Hindu temple in Srilanka

சென்னை: "தமிழ் கலாச்சாரத்தை அழிக்க, இலங்கை அரசு முயற்சிப்பதை, மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். அவரது கடித விவரம்:
இலங்கையில் தமிழ் மொழி, கலாச்சாரம், மதம் போன்றவைகளை அழிக்க, இலங்கை அரசு திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். அங்குள்ள தமிழர்கள், ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். கொல்லைப்புற வழியாக, மிகப்பெரிய கலாச்சாரத்தையும், பழமை வாய்ந்த மதத்தையும் அழிக்கும் முயற்சியில், இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் உள்ள, 89 தமிழ் கிராமங்களுக்கு, சிங்கள பெயர் சூட்டுதல், மாவட்ட, நகர, கிராம எல்லைகளை மாற்றி அமைத்தல், 367 இந்து கோவில்கள் இடித்தல் போன்ற பணிகளில், இலங்கை அரசு ஈடுப்பட்டுள்ளது. உலகின், மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற முறையில், தமிழர்கள் மீதான இந்த கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்தும், தார்மீக கடமை இந்தியாவுக்கு உள்ளது. இதற்கான, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அந்த கடிதங்களில் கூறியுள்ளார்.

ராகுலுக்கு வாழ்த்து :

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட, உங்களை வாழ்த்துகிறேன். இளைஞரான நீங்கள், நாட்டின் கிராமப் பகுதிகளையும், விவசாயிகள் பற்றியும் நன்கு தெரிந்தவர். உங்கள் திறமையால், காங்கிரஸ், மேலும், புதிய வெளிச்சத்தை அடையும். - கருணாநிதி, தலைவர், தி.மு.க.,

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (284)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamilan-indian - madurai,இந்தியா
28-ஜன-201300:22:00 IST Report Abuse
Thamilan-indian கருணாநிதி குடும்பத்திடம் உள்ள சொத்துக்களை வைத்து பல்லாயிரக்கணக்கான கோயில்கள் கட்டலாம். அனைத்தையும் இடிக்கும் திறமை இலங்கையிடம் இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
Anniyan Bala - Chennai,இந்தியா
23-ஜன-201307:13:45 IST Report Abuse
Anniyan Bala கருணா, தமிழ்நாட்டுல இருக்கிற பிரச்சனைகளை தீர்த்தாச்சு பாருங்க. சும்மா எதாவது சொல்லவேண்டியது? பெரியார் வழியில் வந்த இந்த பகுத்தறிவு செம்மல்க்கு கோயில் பற்றிய கவலை எதற்கு?
Rate this:
Share this comment
Cancel
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
21-ஜன-201317:44:04 IST Report Abuse
Wilsonsam Sp எவாளவு காலம் தான் முதுஹில் குத்துவாய் என்று நாங்களு பார்க்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
JOHN SELVARAJ - CHENNAI ,இந்தியா
21-ஜன-201317:42:46 IST Report Abuse
JOHN SELVARAJ இலங்கைப் பிரச்சினையில் விமர்சனம் செய்யும் பலரும் ஒருதலைபட்சமாகவே கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். ராஜபக்ஷே கொன்ற தமிழர்கள் எண்ணிக்கைக்கு சமமாக விடுதலைப்புலிகளும் தமிழர்களைக் கொன்றிருக்கிறார்கள். தனக்கு எதிராகக் கூட அல்ல தனக்கு சமமாக யாரும் களத்தில் இருக்கக்கூடாது என்று எல்லா தமிழ்ப் போராளி குழுக்களையும் அழித்தொழித்த பெருமை புலித் தலைவரையே சாரும். அப்படி செய்யாமல் இருந்திருந்தால் இன்று புலிகள் இல்லாவிட்டாலும் வேறு எதாவது ஒரு போராளிக் குழு தமிழர்களுக்காகப் போராட களத்தில் இருந்திருக்கும் என்பதுதான் உண்மை. இன்று தமிழர்களுக்காகப் போராட இலங்கையில் யாரும் இல்லை என்ற நிலையை உருவாக்கியவர்களே புலிகள்தான் என்பதை உணரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ajith Call Taxi Driver - Chennai,இந்தியா
21-ஜன-201317:38:59 IST Report Abuse
Ajith Call Taxi Driver பெருசு இந்து என்றால் திருடன் என்று அர்த்தம். இப்படி எல்லாம் பேசிட்டு எதுக்கு இப்படி இந்து கோவில பத்தி உனக்கு இப்போ கவலை நாமபாட்டுக்கு நாலு அறிக்கை விட்டோமா கலைஞர் டிவி ல நல்லா கலா ஆட்டத்தை பாத்தோமா கோர்ட் கேஸ் நு அலைஞ்சொமா பசங்க சண்டைய ரசிச்சோமா மத்திய அமைச்சர்கள வச்சு சம்பாரிசோமா நு இருகலாமே
Rate this:
Share this comment
Cancel
Visuwai Deena - TRICHY,இந்தியா
21-ஜன-201317:38:15 IST Report Abuse
Visuwai Deena அன்று தமிழ் இனத்தின் மரண ஓலங்கலும்,குவியல்,குவியலாய் கிடந்த சடலங்களும்,திரு....அய்யா அவர்களுக்கு தெரியவில்லை...தமிழ் இனமே அழிக்கபட்டுவிட்டது,தமிழனின் கலாச்சாரத்தை நிலைநாட்ட வேண்டுமென்று இவர் பேசும்போது,அடடா....அப்படியே தமிழனின் காதுல இன்ப தேன் பாயுதுய்யா....
Rate this:
Share this comment
Cancel
MOHAMED GANI - MADURAI,இந்தியா
21-ஜன-201317:36:44 IST Report Abuse
MOHAMED GANI 2009 இல் நடந்த இந்த போரை இவர் நினைத்தால் மட்டுமல்ல, இந்தியாவே நினைத்தால் கூட நிறுத்தி இருக்க முடியாது. காரணம் இந்த போரை நடத்தியது, நேரடியாக வேண்டுமானால் இலங்கையாக இருக்கலாம், ஆனால் இதன் பின்னணியில் சீனாவின் ஆதரவே அவர்களுக்கு இந்த போரை உக்கிரமாக நடத்த உதவியது, அன்று இந்தியா இவர்களுக்கு உதவவில்லை என்றாலும் கூட.. இந்த போர் நடந்தே இருக்கும். இதில் கருணாநிதியை மட்டும் குறை கூறி அரசியல் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. மத்திய கூட்டாட்சிக்கு கட்டுப்பட்ட ஒரு மாநில முதலமைச்ச்சருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அயல்நாடு விஷயத்தில் இவரால் என்ன செய்திருக்க முடியும். பதவி விலகியிருந்தாலும் பயனென்ன கிடைத்திருக்க போகிறது. ஆட்சியில் தொடர்ந்ததால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க கோரவும் உதவி செய்யவும் முடிந்தது....
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
24-ஜன-201302:54:42 IST Report Abuse
sankarகுறைந்த பட்சம் தன எதிர்ப்பை கூட பதிவு செய்யாமல் சுயநலமாக சூடு சூரனை இல்லாமல் மத்திய அரசின் காலில் விழுந்து கிடந்த முதுகு எலும்பு இல்லாதவர்கள் பற்றி பெசதேர்கள் ...
Rate this:
Share this comment
Cancel
MOHAMED GANI - MADURAI,இந்தியா
21-ஜன-201317:30:44 IST Report Abuse
MOHAMED GANI இலங்கை தமிழர்கள் இன்னும் உண்மையை புரிந்து கொள்ளாதது....உலக தமிழர்களின் உயர்வுக்காக பாடுபடும் கருணாநிதியை புரிந்து கொள்ளாதது வேதனையளிக்கிறது.ஜெயலலிதா ..2009 தேர்தல் பிரசாரத்தில்.. ராஜபக்சேவை ஆதரித்து. போரில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுவது சகஜமே என்று நேரடியாக போரை ஆதரித்தார் - ஆனால் அவரை யாரும் விமர்சனம் செய்வதில்லை. அதுபோல கடந்த தி.மு.க ஆட்சியின்போது இலங்கைப் பிரச்சினைபற்றி வாய்கிழியப் பேசிய சீமான், நெடுமாறன் போன்றவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்? பொடா, தடா அச்சமோ?
Rate this:
Share this comment
Cancel
JOHN SELVARAJ - CHENNAI ,இந்தியா
21-ஜன-201317:23:06 IST Report Abuse
JOHN SELVARAJ இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும், தமிழர்களின் மறுவாழ்வு குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் மீதமுள்ள தமிழர்களையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. தி.மு.க சார்பில் டெசோ மாநாடு நடத்தப்பட்டு அதில் தமிழர்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மு.க.ஸ்டாலின் ஐ.நா சபையில் அளித்தார். அதுபோல கனிமொழியும் பிரதமரை நேரில் சந்தித்து இலங்கைத் தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை மனுவை அளித்தார். அதன்பிறகும் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் தமிழ்மொழி, தமிழ்க் கலாச்சாரம், தமிழர் மதம் ஆகியவைகளை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளை தீவிரமாகவும் முனைப்போடும் மேற்கொண்டு வருவது வருத்தத்திற்குரியதாகும்
Rate this:
Share this comment
Cancel
udanpirappu3 - chennai ,இந்தியா
21-ஜன-201317:07:41 IST Report Abuse
udanpirappu3 கார்த்திக் பிரபாகரன் யாருடைய சொல்லையும் கேட்காதபோது ,கலைஞரை ஏன் குற்றம் சொல்லவேண்டும் ??? சில காலமாகவே ராஜபக்ஷே ,எல்லா நாட்டிற்க்கும் போய் ஆயதங்களை குவித்து , விடுதலைப்புலிகளுக்கு வரும் ஆயுத வரவை தடுத்து ,கருணாவின் மூலம் அனைத்து வழிகளையும் அடைத்து போரை தீவிரப்படுத்தியதன் விளைவு மற்றும் மக்களை கேடயமாக பயன்படுத்தியதன் விளைவு தான் இந்த நிகழ்வு . நெடுமாறன்,வைகோ போன்றவர்களின் இறுமாப்பு ,அன்றைய முதல்வர் கலைஞரை சந்திக்காமல் அதையும் அரசியலாக்கியதன் விளைவே இவ்வளவும். அன்றைய சூழ்நிலையிலும் கலைஞரை இக்கட்டுக்குள் தள்ளத்தான் அனைவரும் முயன்றனரே தவிர, தமிழர்கள் கொந்தளிக்க கூடிய சூழ்நிலையில் கலைஞர் மட்டும் தான் அந்த தள்ளாத வயதிலும் உண்ணாவிரதம், மனிதசங்கிலி ,அறப்போர் என பல்வேறு வடிவங்களில் போரை நிறுத்தப் பாடுபட்டார். வைகோ ,நெடுமாறன்,ஜெயலலிதா ,யாராவது ஒருவர் இப்படி மக்களை திரட்டவோ அல்லது அனைவரும் ஓரணியில் திரண்டு இலங்கைத்தமிழர்களுக்காக நின்றார்களா ???? 40 ம் தோற்கும் என்று எல்லா ஊடகங்கள் சொன்னபோதும், தனக்குத்தானே பிரதமர் என அறிவித்த ஜெயலலிதாவை மக்கள் தூக்கியெறிந்தனர். இன்னும் கலைஞர் போராடிக்கொண்டுதான் உள்ளார் . ஆனால், வைகோ, நெடுமாறன் போன்றோர் திக்குத்தெரியாமல் திரிகின்றனர் . கலைஞர் பல முறை எல்லா தமிழ் இயக்கங்களும் ஒற்றுமையாக இருங்கள்,பலவிதமான தீர்வையும் சொல்லி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர பாடுபட்டார். இந்த வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால்,இதை திரிப்போர்கள் திரித்து அவர்களுக்கு ஏற்ற கதையாக மாற்றி வெற்றியை அனுபவிக்கத்துடிக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை