நேர்த்திக்கடனில் வினோதம் ; குடும்பத்தில் பிரச்னை தீர "உத்தமபுத்திரன்' சிலை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஈரோடு: மனைவியிடம் பிரச்னை செய்யும் கணவனுக்காக, "உத்தமபுத்திரன்' உருவ பொம்மைகளும், கணவனிடம் பிரச்னை செய்யும் மனைவிக்காக, "உத்தமபத்தினி' சிலைகளும், கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத உருவச்சிலை, ஈரோட்டில் தயாராகி வருகிறது. ஒவ்வொரு மகிழ்ச்சி, துக்கங்களுக்கு கோவிலுக்கு செல்வதும், பரிகாரம் செய்வதும், நேர்த்திக்கடன் செலுத்துவதையும் மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

நேர்த்திக்கடனை, பல உருவமாக செய்து வைத்து, வழிபடுவது காலம், காலமாக நடந்து வருகிறது. கணவன், மனைவி ஒருவருக்குள் ஒருவர் அடங்கி, அன்பாக வாழவும், சிலை செய்து, நேர்த்திக்கடன் செலுத்தும் வினோதம் ஈரோட்டில் நடக்கிறது. ஈரோடு மாநகராட்சி இந்திராபுரத்தைச் சேர்ந்த பழனியப்பன், 75, களி மண்ணால் ஆண், பெண், விலங்குகளின் உருவம் கொண்ட சிலை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு துணையாக, மகன் தட்சிணாமூர்த்தி மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.


தவழும் பிள்ளை, தொட்டில் பிள்ளை, நடக்கும் பிள்ளை, மடிகால் பிள்ளை, நடையாள் நடை பெண், ஆடு, பசு, மாடு, குதிரை, வேட்டை நாய், பாதம் ஆகிய உருவங்களை, களி மண்ணால் செய்கிறார்.கணவன், மனைவிக்குள் இருக்கும், குடும்ப பிரச்னை தீரவும், இவர்கள் சிலை செய்கின்றனர். குடித்துவிட்டு, ஊர் சுற்றும் கணவனை திருத்த, பெண்களுக்காக, "உத்தமபுத்திரன்' சிலை செய்கிறார். அதேபோல், பெண்களால் குடும்பத்தில் பிரச்னை தீர, கணவன்களுக்காக, "உத்தமபத்தினி' உருவச்சிலையும் செய்து தருகின்றனர்.


இது குறித்து, பழனியப்பன், தட்சிணாமூர்த்தி கூறியதாவது: உருவச்சிலை செய்யும் தொழிலை, பாரம்பரியமாக செய்து வருகிறோம். அவல்பூந்துறை குளத்தில் இருந்து, களிமண் வாங்கி வருகிறோம். சமீபகாலமாக, தமிழகத்தில், குடும்ப பிரச்னை அதிகரித்துள்ளது. கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும், கோவிலில் வேண்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


கணவன்களுக்காக, "உத்தமபத்தினி' உருவமும், மனைவிகளுக்காக, "உத்தமபுத்திரன்' சிலையும் செய்து தருகிறோம். இவ்விரு சிலையும், அளவுக்கு தகுந்தாற்போல், 1,500 ரூபாய் முதல், 3,000 ரூபாய்க்கு, விற்பனை செய்கிறோம். இச்சிலையை கோவிலில், நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டால், குடும்பத்தில் இணக்கம் ஏற்படும்.


கால் நோய்க்கு பாதம் :

காலில் ஏற்படும் நோய்க்கு பாதமும், குழந்தை பாக்கியத்துக்கு தொட்டிலுடன் குழந்தை செய்து தருகிறோம். பசு, மாடு, குதிரை, 500 ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரையும், பாதம், 200 ரூபாய், வேட்டை நாய் மற்றும் ஆடு தலா, 500 ரூபாய்க்கு விற்கிறோம். வெளிமாவட்டத்தினர், அதிக அளவில் இச்சிலைகளை வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர். இங்கு, ஆண்கள் அதிகமாக சிலைகளை வாங்கி செல்கின்றனர். இச்சிலைகளை வாங்கிச் செல்வோர், தங்களது குல தெய்வம் கோவில் அல்லது ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் நேர்த்திக்கடனாக வைத்து, சுவாமியை பூஜை செய்துவிட்டு சென்றால், தங்கள் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
22-ஜன-201300:06:27 IST Report Abuse
Mohamed Nawaz மூட நம்பிக்கைக்கு அளவே இல்லை, வேதங்களை சரியாக படியுங்கள் கணவன் மனைவி வாழ்க்கையின் புனிதத்தை புரிந்து வாழுங்கள் ஒரு சிலைக்கும் அவசியம் வராது.
Rate this:
Share this comment
PM Rani - new delhi,இந்தியா
23-ஜன-201317:56:26 IST Report Abuse
PM Raniஅவரவர்கள் செய்தால் அது கடவுள் வழிபடு மற்றவர்கள் செய்தால் அது மூட நம்பிக்கை. நம்பிக்கை நல்லதுதான் அது மூடமோ அல்லது புத்திசாலித்தனமோ அவரர் பார்வையைப் பொறுத்தது....
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
21-ஜன-201310:12:05 IST Report Abuse
kumaresan.m " ஆம் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்தால் மற்றும் விட்டு கொடுத்து வாழ்ந்தால் எந்த பிரச்சினையும் வராது ,மீறி வந்தாலும் சுமூகமாக பேசி தீர்த்து கொள்ளலாம் ", இது ஒன்றும் வினோதம் இல்லை ,நாட்டுக்கு நாடு ,மதத்திற்கு மதம் ,இனத்துக்கு இனம் மாறுபடுகிறது அவ்வளவுவே. மேலை நாடுகளில் கூட இது போன்று நேர்த்திகடன் செய்கிறார்கள் ,பின் பற்றும் முறைகள் தான் வேறு .
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
21-ஜன-201308:52:44 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் மக்களின் மூட நம்பிக்கை எப்போதுதான் ஒழியுமோ?
Rate this:
Share this comment
- chennai,இந்தியா
23-ஜன-201315:12:32 IST Report Abuse
 இது ஒன்றும் மூட நம்பிக்கை இல்லை. இதைப்போய் மூட நம்பிக்கை என்று சொன்னால் , கடவுள் நம்பிக்கையை கேவலப்படுத்துவது போலாகும். சொர்க்கத்தில் இருக்கும் கடவுளை நம்புவது தான் முழு மூட நம்பிக்கை....
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
21-ஜன-201303:07:59 IST Report Abuse
Skv எது எப்படியு ஒரு பொம்மை செய்யும் தொழிலாளிக்கு வருமானம் வரதே ,விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே பிரச்சினை வராது என்பது பல தம்பதிகளுக்கு புரியறதே இல்லே, கணவன் குடிகாரனா இருந்தால் மனைவிக்கு பிரச்சினை, மனைவி செலவாழி யாக இருந்தால் சிக்கனமா வாழத்தெரியதவலா இருந்தாலும் கணவனுக்கு பிரச்சினை , பிள்ளைக படிக்கலேன்னா பிரச்சினை இப்படி அடுக்கொண்டே போலாம் குடிய ஒழிக்கணும் , விலைவாசிய குறைக்கணும்னு வேண்டிண்டு பொம்மை வாங்கி வைக்கபடாதூ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்