E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தேசிய தீ பாதுகாப்பு விழிப்புணர்வு கடலூர் பள்ளியில் ஒத்திகை முகாம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஜன
2013
00:27

கடலூர்:கடலூரில், தேசிய தீ பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஒத்திகை பயிற்சி நடந்தது.கடலூர், திருப்பாதிரிப்புலியூர் லட்சுமி சோர்டியா மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.பள்ளியின் தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். துணை முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா, தலைமை ஆசிரியர் சிவானந்தம், உதவி தலைமை ஆசிரியர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோட்ட தீயணைப்பு அலுவலர் குமாரசாமி, உதவி கோட்ட அலுவலர் சரவணன், நிலைய அலுவலர்கள் வீரபாகு, கருணாகரன், சீனிவாசன், ஜஹாங்கீர்முகமது, செந்தில்குமார், உதயகுமார் தெய்வீகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், இயற்கை பேரிடர் மற்றும் தீ விபத்துகள் ஏற்பட்டால் மாணவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும், பதட்டத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் மூலம் விளக்கினர்.தீயை எவ்வாறு அணைப்பது, கட்டடத்தில் மேல் பகுதியில் சிக்கிக் கொண்டவரை எவ்வாறு கீழே இறக்குவது, தீ விபத்து கட்டடங்களில் சிக்கியவரை காப்பாற்றுவது, தீயில் எரிபவரை காப்பாற்றுவது மற்றும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் மூலம் விளக்கினர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.