Advertisement
சண்டிகாரில் இளம் பெண் காரில் கடத்தி கற்பழிப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஜன
2013
00:31

சண்டிகார் : சண்டிகாரில், இளம் பெண் ஒருவர், காரில் கடத்தி செல்லப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார். அரியானா மாநில தலைநகர் சண்டிகாரில், கடந்த, 18ம் தேதி, 24 வயது பெண் ஒருவர், நர்ஸ் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு சென்று, வீடு திரும்ப, பஸ் நிலையத்தில், நின்று கொண்டிருந்தார். முகவரி @கட்டனர் அப்போது, அங்கு வந்த இருவர், அவரிடம், முகவரி கேட்பது போல் நடித்து, காரில் கடத்தி சென்றனர். அந்தக் காரில், இரு பெண்களும் இருந்துள்ளனர். அவர்கள், அப்பெண்ணுக்கு போதை ஊசி போட்டு உள்ளனர்.
இரண்டு நாளுக்குப் பின், நேற்று முன் தினம் மாலை, அரியானாவில், பதின்டா அருகே, அக்கும்பல், ஓடும் காரிலிருந்து அப்பெண்ணை கீழே தள்ளி, முட்புதரில் வீசிச் சென்றது. போலீசாரால் மீட்கப்பட்ட அப்பெண், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். கொலை முயற்சி வழக்கு போலீசாரிடம், அவர் கொடுத்த வாக்குமூலத்தில், காரில் கடத்திச் சென்ற கும்பல், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண், கொலை முயற்சி வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளி வந்துள்ளது தெரிய வந்தது.இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு, திருமணமான, சுனில் என்பவருடன் தொடர்பு உள்ளது. சுனிலின் மனைவிக்கு, எய்ட்ஸ் பாதிப்பு உள்ளதால், இவர்களின் தொடர்பு நீடித்தது. சுனில் மீது, அவர் மனைவி கொடுத்த புகாரை அடுத்து, சுனில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார். காரணம் என்ன? அதே நேரத்தில், கொலை முயற்சி வழக்கில் கைதான, தன் கணவரின் காதலி, ஜாமினில் வெளிவந்ததை அறிந்த, சுனிலின் மனைவியும், அவரது தாயும், அடையாளம் தெரியாத இரண்டு நபர்களை வைத்து, அப்பெண்ணை கடத்தியுள்ளனர். கடத்தியவர்களே, அவளை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இவ்வாறு, அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.