Advertisement
ஒரு குடும்பத்தில் 2 அடி உயர சகோதரர்கள் : உதவித்தொகை கோரி "கடைக்குட்டி' மனு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஒரு குடும்பத்தில் பிறந்த 3 சகோதரர்களும் 2 அடி உயரமே உள்ளனர். இவர்களில் இளையவர் வாழ உதவித்தொகை கோரி கலெக்டரிடம் மனு அளித்தார். திருப்பாலைக்குடியை சேர்ந்தவர் காதர்கனி, 47. இவர் இரண்டு அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ளார்.




வழியின்றி தவிப்பதால், அரசு உதவித்தொகை கோரி ராமநாதபுரம் கலெக்டர் நந்தக்குமாரிடம் மனு கொடுத்தார். இவர் கூறியதாவது: தந்தை ரபீக், 79. தாயார் இபுராஹிம்மா சமீபத்தில் இறந்துவிட்டார். உடன் பிறந்த இரு சகோதாரர்களும் இரண்டு அடி உயரமே உள்ளனர். மூத்தவர் சீனி உம்மர், 58, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு சகோதரர் நாகூர்கனி பிச்சை எடுக்கிறார்.

நான், பெரியம்மா மகள் வீட்டில் தங்கி உள்ளேன். என்னால், எந்த வேலையும் செய்ய முடியாது. உதவிக்கு ஆள் தேவை. மாற்றுத்திறனாளி அடையாள அட்டை இருக்கிறது. வாழ வழியின்றி உள்ளதால் அரசின் உதவித்தொகை கோரி மூன்று முறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இப்போதும் மனு கொடுத்துள்ளேன், என்றார்.




கலெக்டர் நந்தக்குமார் கூறியதாவது: குறை தீர் கூட்டத்தின்போது, நானும் டி.ஆர்.ஓ., விஸ்வநாதன் இருவரும் மனுக்களை வாங்கினோம். காதர்கனி மனு குறித்து எனது கவனத்திற்கு வரவில்லை. இருப்பினும், அவரது மனு குறித்து விசாரணை நடத்தி உரிய உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
22-ஜன-201310:24:28 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இவரை போன்றே இரண்டடி உயரம் கொண்ட உண்டப்பக்று என்ற அஜயன் மலையாள சினிமாவில் ஜொலிக்கிறார்.
Rate this:
7 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.