Auto rickshaw driver's daughter tops CA exam | அகில இந்திய அளவில் நடந்த சி.ஏ., தேர்வில் தமிழக ஆட்டோ டிரைவர் மகள் முதலிடம் | Dinamalar
Advertisement
அகில இந்திய அளவில் நடந்த சி.ஏ., தேர்வில் தமிழக ஆட்டோ டிரைவர் மகள் முதலிடம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மும்பை: அகில இந்திய அளவில் நடந்த சி.ஏ., தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள் பிரேமா ஜெயக்குமார் முதலிடம் பிடித்துள்ளார்.

மும்பை புறநகர்ப்பகுதியான மலாட்டைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் பெருமாள். தமிழகத்தைச் சேர்ந்த பெருமாள், பல ஆண்டுகளுக்கு முன் மும்பையில் குடியேறியவர். தற்போது மும்பையில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மகள் பிரேமா ஜெயக்குமார். 24 வயதான பிரேமா, கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்த அகில இந்திய சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் தேர்வில், இந்தியாவிலேயே முதல் மாணவியாக தேர்வாகியுள்ளார். மொத்த மதிப்பெண்களான 800க்கு 607மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் பிரேமா. மலாட் பகுதியில் ஒரு அறை கொண்ட வசதி குறைவான வீட்டில் தற்போது வசிக்கிறது ஜெயக்குமார் குடும்பம்.


இந்நிலையில், தனது வெற்றி குறித்து பிரேமா கூறுகையில், "இது தன் வாழ்வில் மிக முக்கியமான சாதனை. என்னைப் பொறுத்தவரையில் கடின உழைப்பே இந்த வெற்றிக்கு காரணம். எனது தந்தை மற்றும் தாயின் ஆசியும், உதவியும் இல்லாவிட்டால் என்னால் வெற்றி பெற்றிருக்க முடியாது. எனது பெற்றோர் என்னை ஊக்குவித்தனர். இப்போது எனது பெற்றோரை மிகவும் வசதியாக வாழ வைக்க விரும்புகிறேன். எனது படிப்புக்கு பணம் ஒரு தடையாக வருவதை எனது தந்தையும், குடும்பத்தலைவியான எனது தாயும், எனது சகோதரனும் ஒருபோதும் அனுமதித்ததில்லை" என்று தெரிவித்துள்ளார். பிரேமாவின் சகோதரரும் தற்போது சி.ஏ., தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (24)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapathy - khartoum,சூடான்
24-ஜன-201309:40:08 IST Report Abuse
ganapathy இவர் எந்த குலம் அல்லது ஜாதி தெரியாது. இருந்து திறமையாக படித்து முதல் மாணவியாக வந்து உள்ளார். வறுமையில் இருந்த போதும், தன முயற்சியை கைவிடாது முன்னேறி உள்ளார். இவரை போன்ற பலர் திறமை சாலிகளாக தான் இருப்பார்கள் (எல்லா இன, ஜாதிகளிலும்) பின்ன எதற்கு ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் பிரமோசன். பணம் உள்ளவன் லஞ்சம் கொடுத்து ஜாதி அடிப்படையில் முன்னேற இவர்களை போன்ற திறமை இருந்தும் லஞ்சம் கொடுக்க முடியாமல் முன்னேற முடியாமல் அரசு வேலை வாய்ப்புகளில் அடி மட்டத்தில் இருந்து விட வாய்ப்பு உண்டு. திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படிப்பு சிறந்தது. நல்ல வேலை கிடைக்கும். படிப்பது கஷ்டம். உழைப்புக்கு பலன் உண்டு. வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
K Naganathan - Chennai,இந்தியா
23-ஜன-201315:25:45 IST Report Abuse
K Naganathan வாழ்த்துக்கள் சகோதரி......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
23-ஜன-201315:24:43 IST Report Abuse
Guru 10 திங்கள் சுமந்தாளே அவள் பெருமை படவேண்டும், உன்னை பெற்றதனால் அவள் மற்றவராளே போற்ற படவேண்டும்.... என்ற வரிகளுக்கு ஏற்ற மகள்.. வாழ்த்துக்கள் சகோதரி.. பெருமையாக இருக்கிறது...
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
vaidyanathan - Chennai,இந்தியா
23-ஜன-201312:15:32 IST Report Abuse
vaidyanathan Congratulation, She is roll model for youngsters, my sincere prayer for prosperous long life for her and all family members.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
23-ஜன-201310:52:24 IST Report Abuse
mirudan "தெய்வத்தான் ஆகதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் " தெய்வப்புலவர் திருவள்ளுவர் இரண்டே வரிகளில் சொல்லி இருக்கிறார் " ஆட்டோ டிரைவரின் மகள் பிரேமா ஜெயக்குமார் முதலிடம் பிடித்துள்ளார். எனபது அவரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. ஆல் தி பெஸ்ட் பிரேமா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Kperiyasamy Kalimuthu - Sivagangai(karaikudi),இந்தியா
23-ஜன-201310:43:31 IST Report Abuse
Kperiyasamy Kalimuthu ஒரு விதைதான் பூமிக்குள் புதைக்கப்பட்டது அது எத்துணை விருச்சமாய் நிழல் தருகிறது இந்த மரம் நாளையும் பூவும் காயுமாய் இன்னும் எத்தனையோ விதைகளை உற்பத்தி செய்யும் lanjsam தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து இவ் வையம் உன்னை வாழ்த்தும் நாளை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
டேய் நாதஸ், - திருவ்ண்ணாமலை,இந்தியா
23-ஜன-201309:41:07 IST Report Abuse
டேய் நாதஸ், தொடரட்டும் உன் வெற்றிகள்...வாழ்த்துக்கள் சகோதரி பிரேமா...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
manjai.v.mohan - Ooty free IAS academy ,இந்தியா
23-ஜன-201309:12:43 IST Report Abuse
manjai.v.mohan தமிழர்களை தலை நிமிர செய்யும் சாதனை ...மனம் மார்ந்த நல்வாழ்த்துக்கள் ...அன்புச்சரம் இலவச கல்வி அற க்கட்டளை
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-ஜன-201308:26:10 IST Report Abuse
D.Ambujavalli படிப்புக்கும், முன்னேற்றத்திற்கும் வறுமையோ, வசதி இன்மையோ என்றும் தடை இல்லை. ஊக்கமும் உழைப்பும் உள்ள இடத்தில் வித்தையும், தொடர்ந்து செல்வமும் தானே வந்து சேரும். வாழ்த்துக்கள் மகளே.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
JAIRAJ - CHENNAI,இந்தியா
23-ஜன-201307:58:00 IST Report Abuse
JAIRAJ நீ உன் தந்தையின் உழப்ப்புக்கு கொடுத்த மரியாதை. வாழ்க வளர்க
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்