Karunanidhi Great grand daughter marriage | விசேஷ சுபமுகூர்த்த நாளில் கருணாநிதி கொள்ளுப்பேத்தி திருமணம் கோலாகலம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விசேஷ சுபமுகூர்த்த நாளில் கருணாநிதி கொள்ளுப்பேத்தி திருமணம் கோலாகலம்

Added : ஜன 23, 2013 | கருத்துகள் (104)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
விசேஷ சுபமுகூர்த்த நாளில் கருணாநிதி கொள்ளுப்பேத்தி திருமணம் கோலாகலம்

சென்னை:""என் குடும்பத்தில், சம்பந்தம் எடுத்துள்ளதால், போலீஸ் அதிகாரி சண்முகராஜேஸ்வரனுக்கு, என்ன விளைவு ஏற்படுமோ...'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார்.

கருணாநிதி கொள்ளு பேத்தியும், சினிமா நடிகராக இருந்த, மு.க.முத்து-சிவகாம சுந்தரியின் பேத்தியும், தொழில் அதிபர் ரங்கநாதன், தேன்மொழி மகளுமான அமுதவல்லிக்கும், திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன் மகன் சித்தார்த்க்கும், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நேற்று திருமணம் நடந்தது.

மணமக்களை வாழ்த்தி கருணாநிதி பேசியதாவது:டில்லியில், எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும், கட்சி சார்பற்று தலைவர்கள் பங்கேற்கின்றனர்; தமிழகத்தில் அந்த நிலை இல்லை.கருணாநிதி வீட்டில் அல்லது அவரது குடும்பத்தார் வீட்டில், இதுபோன்ற, சம்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டால், அவர்களுக்கு எவ்வளவு துன்ப, துயரங்கள், கஷ்ட, நஷ்டங்கள், சோதனைகள் ஏற்படும் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்து தான், இதை ஒரு அதிசயமாக, சண்முக ராஜேஸ்வரனைப் புகழ்ந்து, பாராட்டியுள்ளனர்.கடவுளுக்கு பயப்படணும்நேர்மையும், நாணயமும் நல்வழியில் செல்கிற, மனப்பான்மையும் இருந்தால், எந்த ஒரு அதிகாரியும் பயப்படத் தேவையில்லை. அவர்கள் நம்புகிற கடவுளுக்குப் பயப்பட வேண்டும் அல்லது நாம் வலியுறுத்துகிற, மனசாட்சிக்கு பயப்பட வேண்டும்.மனசாட்சிக்கு பயப்படுகிறவர்கள் தான், நல்ல சமுதாயத்தில் ஒளிவிட முடியும். அப்படிப்பட்ட நேர்மையானவராக, நாணயமானவராக, துணிச்சல் உள்ளவராக சண்முகராஜேஸ்வரன் இருக்கிறார்.இந்த அளவிற்கு, அவரை நான் பாராட்டுவதே, அவருக்கு என்ன விளைவை ஏற்படுத்துமோ என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும் கூட, அவர் மீதுள்ள அன்பின் காரணமாக, பாராட்டுதலை நிறுத்திக் கொள்கிறேன்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.


நல்ல நேரம் பார்த்து...:

தை மாதம் முதல், ஆடி மாதம் வரை, உத்தராயண காலம். இந்த காலத்தில், தெய்வங்களிடம் எதிர்பார்க்கும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.நேற்று, அதி விசேஷமான சுபமுகூர்த்த நாள். கருணாநிதியின் கொள்ளு பேத்தி திருமணம், இத்தகைய நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து நேற்று நடந்துள்ளது. இதனால், எதிர்பார்க்கும் சுபகாரியங்கள் கை கூடும் என, அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கைது செய்தவரே சம்பந்தியானார்:

மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனராக, சண்முகராஜேஸ்வரன், 12 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றினார். அப்போதைய, அ.தி.மு.க., ஆட்சியில், மேம்பாலம் ஊழல் புகார் தொடர்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.ராணி மேரி கல்லூரி இடிப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது தொடர்பாக, பொருளாளர் ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.இருவரின் கைது படலத்தில், சம்பந்தப்பட்ட சண்முக ராஜேஸ்வரன், கைது சம்பவத்தின் போது, "மனித உரிமையை மீறினார்' என்று, தி.மு.க., சார்பில், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாநில மனித உரிமை கமிஷனில் புகார் மனு அளித்தார்.கருணாநிதி கொள்ளுப் பேத்திக்கும், சண்முக ராஜேஸ்வரன் மகன் சித்தார்த்துக்கும் நேற்று திருமணம் நடைபெற்றதன் மூலம், சண்முகராஜேஸ்வரன், கருணாநிதியின் குடும்பத்திற்கு சம்பந்தியாக மாறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.saravanan - tirupur,இந்தியா
27-ஜன-201312:01:56 IST Report Abuse
p.saravanan வாழ்த்துக்கள் , பல்லாண்டு வாழ்க , கணவனே கண்கண்ட தெய்வமாய்.
Rate this:
Share this comment
Cancel
raj tbm - telok blangah,சிங்கப்பூர்
24-ஜன-201319:04:12 IST Report Abuse
raj tbm உபதேசம் செய்பவர்கள் தனது கொள்கையில் விளகாதிருக்கவேண்டும். பிறகு மற்றவர்க்கு மனைவி உட்பட உபதேசிக்கலாம். குறைந்தபட்சம் மற்றவர் மனதை புன்படுத்தாமளிருக்கலாம். இன்னும் என்ன சுயமரியாதை, பகுத்தறிவு, அது, இது என்று ஏன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.இன்னும் யாருக்கு சுயமரியாதை தெரியவில்லை. வறுமை ஒழிப்பு,வேலைவாய்ப்பு போன்றவற்றில் கவனத்தை செலுத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Conjivaram Rajan Gopalkrishnan - Chennai,இந்தியா
24-ஜன-201317:22:20 IST Report Abuse
Conjivaram Rajan Gopalkrishnan ஒரு பொறுப்புள்ள தந்தை தனது மகன் வறுமையில் வாடும்போது செய்ய தவறியதை பெரியமனம் படைத்த ஜெயலலிதா அவர்கள் முன்வந்து முத்துவுக்கு உதவி இருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
SK2011 - Sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜன-201316:03:32 IST Report Abuse
SK2011 கருணாநிதி தன் மனசாட்சிக்கும் மக்களுக்கும் துரோகம் செய்ததால் தான் கடவுள் அவரை தண்டித்து கொட்டத்தை அடக்கி உள்ளார். மக்கள் கடவுள் ரூபமாக வாக்களித்து கருணாநிதி என்ற தீய சக்தியை தூக்கி எறிந்தார். தண்டனை கிடைத்தும் மீண்டும் தண்ணீர் , மின்சாரத்தில் கை வைத்து விளையாடும் கருணாநிதிக்கு இதே கடவுளின் தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
SK2011 - Sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜன-201315:49:49 IST Report Abuse
SK2011 நாட்டின் அக்கறையை விட குடும்பத்தின் அக்கறை தான் ஒவ்வொரு நாளும் கருணாநிதி இடம் காணமுடிகிறது. தண்ணீர், மின்சாரத்துக்கு சோனியா Gandhi oda pesi vaanga vakkum இல்லை, துப்பும் இல்லை. என்னே பேச்சு வேண்டிகடக்கு.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
24-ஜன-201314:38:49 IST Report Abuse
தமிழ் குடிமகன் ஊருக்குதான்யா உபதேசம் நமக்கில்லை ...................
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
24-ஜன-201311:15:01 IST Report Abuse
சகுனி முகூர்த்த தேங்கா மேல இருந்த தாலிய தாத்தா எடுத்து குடுக்க மாப்பிள்ளை கட்டியதை டிவில பார்த்தேன் .......... கலைஞரோட ஜென்ம விரோதியான "பிராமணர் மந்திரம் ஒதினாரா" இல்ல கலைஞர் பகுத்தறிவுப்படி "வாழ்த்துப்பா" பாடி கல்யாணம் பண்ணி வெச்சாரான்னு யாராவது விளக்கினா நல்லா இருக்கும் ........
Rate this:
Share this comment
திராவிடன் - chennai ,இந்தியா
24-ஜன-201319:03:24 IST Report Abuse
திராவிடன்மணி , சூப்பர் பஞ்ச் ...........................
Rate this:
Share this comment
Cancel
Ravi Chandran - Panaji,இந்தியா
24-ஜன-201310:39:30 IST Report Abuse
Ravi Chandran தமிழில் நாசூக்காக புகுந்து விளையாடுகிறீர்களே திரு அமானுல்லா.....அற்புதமான கமெண்ட் சாரி கருத்து....
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
24-ஜன-201310:22:22 IST Report Abuse
kumaresan.m இதில் இரண்டு விஷயங்கள் பார்க்க வேண்டும் ,திருமணம் இருவீட்டார்களின் சம்மதம் இதில் தவறேதும் இல்லை மற்றும் கைது செய்த போலீஸ் அதிகாரி சம்மந்தி வரவேற்க தக்க ஒன்று மற்றும் பாராட்ட படவேண்டிய ஒன்று ,மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ....
Rate this:
Share this comment
Cancel
suresh kanyakumari - Nagercoil,இந்தியா
24-ஜன-201310:03:26 IST Report Abuse
suresh kanyakumari "அப்படிப்பட்ட நேர்மையானவராக, நாணயமானவராக, துணிச்சல் உள்ளவராக சண்முகராஜேஸ்வரன் இருக்கிறார்.இந்த அளவிற்கு, அவரை நான் பாராட்டுவது " ..தப்பு செய்த எங்களை தூக்கி உள்ளே போட்டதுனால் தான் என்று சொல்லுகிறாரோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை