சென்னை: விரைவில் வெளி வரவிருந்த விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டது தொடர்பாக நடிகர் கமல் இன்று வெளியிட்டுள்ள கருத்தில் இது தொடர்பாக சட்ட ரீதியாக சந்திக்க போவதாகவும், தனது படத்தை வெளியிடாமல் தடுக்க சிலர் சதி செய்வதாகவும், அரசியலுக்காக தன்னை பயன்படுத்துவதாகவும், கமல் வேதனை தெரிவித்துள்ளார்.
கமலின் விஸ்வரூபம் படம் நாளை(25ம் தேதி) ரிலீஸ் ஆக இருந்த நிலையில், அப்படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல சித்தரிப்பதாக கூறி விஸ்வரூபம் படத்திற்கு 15 நாட்கள் தமிழக அரசு இடைக்கால தடை விதித்தது . இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கலாச்சாரம் பெயரில் பயங்கரவாதம் :
இந்நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, எனது விஸ்வரூபம் படத்தை தடை செய்தது சட்டவிரோதமானது. இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். அரசியல் லாபத்திற்காக சிலர் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று சதி செய்கின்றனர். விஸ்வரூபம் படம் நிச்சயம் முஸ்லிம்களுக்கு எதிரான படம் அல்ல. தொடர்ந்து ஒரு பிரபலத்தை காயப்படுத்துவது மிகவும் வேதனையாக உள்ளது கலாச்சாரம் என்ற பெயரில் பயங்கரவாதம் நடத்தப்படுவது நிறுத்த வேண்டும். என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசன் நடித்து, இயக்கி ஹாலிவுட் தரத்திற்கு பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படம் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் கமலுக்கு தொடர்ந்து கொண்டே இருந்தன.
டி.டி.எச். பிரச்னை :
இந்நிலையில் படத்தை முடித்து ரிலீஸ் செய்யலாம் என்று இருந்தநிலையில், தனது படத்தை டி.டி.எச்.இல் வெளியிடப்போவதாக கமல் அறிவித்தார். இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பின்னர் அவர்களுடன் ஏற்பட்ட சமரச பேச்சால் தனது டி.டி.எச். முயற்சியை தியேட்டரில் வெளியான ஒருவாரத்திற்கு பின்னர் ரிலீஸ் செய்வதாக அறிவித்தார். படமும் நாளை 25ம் தேதி தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருந்தது.
முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு :
15 நாட்கள் தடை :
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கமல்ஹசனிடமிருந்து இத்தகைய பக்குவமற்ற ஒரு படைப்பை நிச்சயமாக நாம் எதிபார்க்கவில்லை. ஒரு பகுத்தறிவுவாதியாக தன்னை காட்டிகொள்ளும் கமல்ஹாசன் ஒரு குறிப்பிட்டநம்பிக்கை கொண்ட சமூகத்தை இவ்வாறு கொச்சைபடுத்துவது எந்த வகையில் நியாயம்?
ஒரு கவர்ச்சி படத்தில் நடிகையை கவர்ச்சியாக பார்த்தால் ஒவ்வொரு ஆணும் சந்தோஷப்படுவான் , ஆனால் அது போல் தனது தாயையோ, மனைவியையோ, சகோதரியையோ, மகளையோ பார்க்க விரும்ப மாட்டான். அது போல் தான் ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்க்கைமுறை மார்க்கமான இஸ்லாத்தை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டான். அடுத்தவர்களுக்கு அது வொரு பொழுதுபோக்கு ஆனால் முஸ்லிமுக்கு அப்படியல்ல.
நுண் கலை ( fine arts ) என்ற பெயரில் சினிமாக்காரர்கள் இது வரை அதிகமாக செய்தது சதை வியாபாரம் மற்றும் வன்முறை கலாசார தூண்டலே , இதில் கமல் விதிவிலக்கு கிடையாது.
காதல் நாயகன்
கமல் தமிழகத்தின் செல்ல குடிகாரன்
களத்தூர் கண்ணம்மாவின் செல்லபுதல்வன்
காதல் நாயகனாய் இவன்
கதை கவிதை இசை பாடல்கள்
எண்ணற்ற கலைகளின் சங்கமம்
சமூத்துக்காக பிரிநூல் துறந்த பெரியார்
பரமனின் திருவடி அவதரித்த குடிகாரன்
பரம்பரை குடிகாரனில்லை இவன்
ஆம் இவன் பரமகுடிகாரன்
பகுத்தறிவின் பங்காளன்
சாதிகள் இவனுக்கில்லை
சாதனைகள் ஒன்றே நோக்கம்
மதங்கள் இவனுக்கில்லை
மார்க்கம் ஒன்றே இவனின் நோக்கம்
ஒரு தமிழனை வாழ்த்த மனமில்லாவிடினும்
வாழ விடுங்கையா
கா பெரியசாமி காரைக்குடி
விஸ்வரூபம்
நான் நேற்று இரவு மலேசியா சென்று இந்த படத்தை பார்த்து விட்டேன். ரொம்ப நல்லா இருக்கு. இதுல யாரையும் புன்படுத்த இல்லையே, அப்புறம் எதுக்கு இந்த கோமாளிகளுக்காக அரசு தடை செய்து இருக்கிறது. முஸ்லிம் நாடான மலேசியாவில் கூட தடை இல்லை. ஆனால் இந்தியாவில்? இந்தியாவில் உண்மையான மக்கள் ஆட்சி நடக்கவில்லை என்று பலமுறை தினமலரில் நான் கருத்து எழுதி இருக்கிறேன். அதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று. இங்கு சில சுயநலம் கொண்ட கும்பல்கள்தான் ஆட்சி மற்றும் அதிகாரம் செலுத்துகின்றன. மக்கள் கருத்துக்கும் மதிப்பு கிடையாது. மக்களுக்கும் மரியாதை கிடையாது. ஒரு சாதாரண சினிமா வை பிரச்சினை ஆக்கியது இந்த சினிமா அல்ல. சுயநலம் கொண்ட கும்பல் தான் காரணம். இந்த சினிமா பத்தி யாரும் கண்டுகொள்ளவே இல்லை நேற்று வரைக்கும். எந்த பிரச்சினையும் இல்லை நேற்று வரைக்கும். ஆனால் இன்று? காரணம் யார்? இந்த சினிமா வா அல்லது இந்த இந்த சுயநல கும்பலா? இதிலிருந்தே தெரிகிறது பிரச்சினையை தூண்டி விடுவது இந்த சுயநல கும்பல் என்று. ஏராளமான சினமாக்களில் திருநெல்வேலிகாரன் ரொம்ப மோசமானவங்கடா என்று வசனம் இருக்கிறது. அதற்காக திருநெல்வேலி மக்களுக்கு இந்த திரைபடத்தை காண்பித்துவிட்டுத்தான் வெளியிடவேண்டும் என்று சொல்வது முட்டாள்தனம் இல்லையா? ஒரு ஜாதியினரை பல திரைப்படங்களில் நாட்டாமையாக காண்பித்து இருக்கிறார்கள். அதற்காக மற்ற ஜாதியினர் அனைவரும் என் ஜாதியினை எப்படி நீ இரண்டாம்பட்சமாக படம் எடுக்கிறாய் என்று புகார் செய்து வெளியிட முடியாமல் செய்தால் முட்டாள்தனம் இல்லையா? பல திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி தொடர்களிலும் அண்ணாச்சியை வில்லனாக காண்பிக்கிறார்கள். அன்னாசிமார்களுக்கு திரையிட்டு விட்டு ஓசியில் படம் பார்த்துவிட்டு மற்றவர்களுக்கு இந்த படம் வெளியிட கூடாது என்று சொல்வது முட்டாள்தனம் இல்லையா? சின்ன கவுண்டர் என்று எப்படி நீ தலைப்பு வைக்கலாம் என்று கவுண்டர் ஜாதியினர் அனைவருக்கும் ஓசியில் படத்தை பார்த்துவிட்டு வெளியிட கூடாது என்று சொன்னால் முட்டாள்தான் இல்லையா? இது திரைப்பட துறையினருக்கு ஒரு வெட்ககேடு. சும்மா சும்மா போராடும் இந்த திரைப்பட மகா நடிகர்கள் ஒரு உண்மையான கலைஞனுக்காக மட்டுமின்றி சினிமாவின் மைய வேருக்கு வந்த பிரச்சினை என்று என் போராட வில்லை? இந்த சிறுமான்மை கும்பல் என்றாவது தங்கள் மத மக்களின் ஜீவாராதன பிரச்சினைகளுக்காக போராடி இருக்கிறார்களா? தங்கள் மத வழிபாட்டுக்கு அருகில் இருக்கும் சாராய கடையை மூட கூட துப்பு இல்லை உங்களுக்கு. அவர்களுக்கு தேவையான கல்வியை குடுக்க உங்களுக்கு துப்பு இல்லை. உங்களை நம்ப கூட உங்கள் மத மக்கள் தயாராக இல்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு சுயநலவாதிகள்.
சென்சர் போர்டு ஒன்று எதற்கு இருக்கிறது? அதன் பணி தான் என்ன? யார் கொடுத்தார்கள் அரசியல் கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு திரைப்படத்தை தடை பண்ணும் அதிகாரத்தை? இவர்களது எதிர்ப்பை முறையாக சென்சர் போர்டிடம் அல்லவா தெரிவிக்க வேண்டும்? இதில் மிக பயங்கர அரசியல் சூழ்ச்சி இருக்கிறது பலிகடாவாக ஒரு திறமையான கலைஞன்
This is a political conspiracy to scuttle the release of the film..Once the CBFC certifies and allows a film to be screened,it is binding on all.It is sad that Kamal was harassed by cultural terrorism.As the centre had suggested,the ban should be revoked..Nobody has seen the film and so much din and clutter brings only support for KamalHaasan..Don't lose heart,it is only a passing cloud Mr.Kamal Haasan..Kadvulin arul umakku undu..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.