டாஸ்மாக்' கடைகளில் குவிந்த "குடி'மகன்கள் ஒரே நாளில் ரூ.150 கோடி விற்பனை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

"டாஸ்மாக்' கடைகளுக்கு, இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விடப்படுவதால், நேற்று ஒரே நாளில் மட்டும், 150 கோடி ரூபாய் அளவுக்கு, "சரக்குகள்' விற்பனையாகின.இன்று முதல் மூன்று நாட்கள், மிலாது நபி, குடியரசு தினம் மற்றும் வள்ளலார் தினம் போன்றவை, அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து வருவதால், டாஸ்மாக் கடைகளுக்கு, தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.மதுபான கடைகளை அரசு ஏற்று நடத்த ஆரம்பித்த, 2003ம் ஆண்டிலிருந்து, டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது இல்லை. இப்போது முதல் முறையாக, டாஸ்மாக் கடைகளுக்கு, தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது, "குடி'மகன்களுக்கு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விடப்படுவது குறித்த அறிவிப்பு, ஒரு வாரத்திற்கு முன்னரே வெளியானது. இதனால், தங்களுக்கு தேவையான சரக்குகளை, "குடி'மகன்கள் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளத் துவங்கினர்.
இதற்கேற்ப, டாஸ்மாக் கடைகளில் ஏராளமான சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டன. இதனால், நேற்று காலை முதலே டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம், நிரம்பி வழிந்தது. கூட்டத்தை சமாளிக்க முடியாமல், ஊழியர்கள் திண்டாடினர். சில இடங்களில் போலீசாரும் பாதுகாப்புக்கு இருந்தனர்.இது குறித்து, டாஸ்மாக் நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக தினமும், 50 கோடி ரூபாய் அளவுக்கு சரக்குகள் விற்பனையாகும். சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில், 70 முதல், 80 கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு விற்பனை இருக்கும். நாளை முதல், தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் விற்பனை இருந்தது. இன்று ஒரே நாளில் மட்டும், 150 கோடி ரூபாய் அளவுக்கு சரக்குகள் விற்பனையாகின."பார்'கள் மற்றும் கள்ள மார்க்கெட்டில் சரக்குகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக, சிலர் அதிகளவில் சரக்குகளை வாங்கி இருப்பு வைத்துள்ளனர். இது குறித்து, போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (51)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram prasad - Sri rangam,இந்தியா
26-ஜன-201319:28:44 IST Report Abuse
ram prasad அட விஜைகாந்தே குடிக்க கூடாது என்று சொல்கிறார் ஜெ ஊழலுக்கு , விலை எற்றதிர்க்கு எதிரா பேசுவது போல
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஜன-201314:18:50 IST Report Abuse
தமிழ்வேல் // நேற்று காலை முதலே டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம், நிரம்பி வழிந்தது
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஜன-201314:17:14 IST Report Abuse
தமிழ்வேல் இதுபோல தொடர்ந்து 3 நாள் மூடுனா ... பாவம் அவுங்க எப்புடி விற்ப்பனை இலக்கை எட்ட முடியும் ?
Rate this:
Share this comment
Cancel
kudipavanai adippavan - trichy  ( Posted via: Dinamalar Android App )
25-ஜன-201313:48:06 IST Report Abuse
kudipavanai adippavan எல்லாருமே மது குடிகாதீங்கனு விளம்பரம் செய்ராங்களே தவிர எவனாவது மது தயாரிக்காதீங்கனு சொல்ரானா அப்புறம் எப்டிடா மது ஒழியும்
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
25-ஜன-201313:26:05 IST Report Abuse
s.maria alphonse pandian தீபாவளி பண்டிகைக்கு என்றால் இருநூறு கோடிக்கு விற்பனை என்று இலக்கு நிர்ணயிக்கிறார்கள்....மிலாடி நபிக்கு என்றால் கடையை மூடு என்கிறார்களே..ஏன்?
Rate this:
Share this comment
Cancel
Vaal Payyan - Chennai,இந்தியா
25-ஜன-201313:14:58 IST Report Abuse
Vaal Payyan தங்கமான உறவுகள் டாஸ்மாக் கில் மட்டுமே ...
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
25-ஜன-201312:35:41 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. அப்போ...நேற்று முன்தினம் வேலைநீக்கம் செய்யப்பட்ட.. ஊழியர்களுக்கு.. திரும்பவும். வேலை கிடைக்குமா.. ? அன்னை அருட்கொடை புரிவாரா...?
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
25-ஜன-201313:42:32 IST Report Abuse
LAX'அன்னை' அருட்கொடை புரிந்தால் ஒன்றும் நடக்காது.. டாஸ்மாக் என்ன மத்திய அரசாலா நடத்தப் படுகிறது?...
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
25-ஜன-201313:47:21 IST Report Abuse
மதுரை விருமாண்டிமப்பிலே இல்லாமல் இருந்தால் ......
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
25-ஜன-201312:20:47 IST Report Abuse
kumaresan.m " அடடா நேற்றைய செய்தியில் அதிகாரிகளுக்கு சஸ்பெண்டு இன்றைய செய்தியில் 150 கோடி வருமானம் .இந்த புள்ளி விவரங்களை பார்த்துதான் சில அரசியல் தலைவர்கள் தற்பொழுதுள்ள மக்களிடம் பணப்புழுக்கம் அதிகமாக உள்ளது என்று கூறுகிறார்கள் ,மூன்று நாட்கள் ரேசன் கடை விடுமுறை என்றால் இவ்வாறு சென்று வரிசையில் நின்று வாங்குவார்களா என்பது ஒரு மில்லியன் கேள்வி குறி ??? இன்னும் சிலநாட்களில் கேரளாவை பின்னுக்கு தள்ளி தமிழ் நாடு ( டாஸ்மாக் நாடு ) முதல் இடம் பிடித்து விடும் ???
Rate this:
Share this comment
Cancel
Devakotti Jagadishkumar - chennai,இந்தியா
25-ஜன-201312:05:12 IST Report Abuse
Devakotti Jagadishkumar தமிழன் என்று சொல்லடா தினமும் குடி குடித்து நில்லடா
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
25-ஜன-201314:05:37 IST Report Abuse
LAXகுடி குடிச்சா அப்புறம் எங்கே நிக்கறது?...
Rate this:
Share this comment
Cancel
RAJA - chennai,இந்தியா
25-ஜன-201311:53:28 IST Report Abuse
RAJA இப்படி மதுவிற்கு அடிமையாகி நம் மக்களை முட்டாள் ஆக்கி இலவசங்களை கொடுத்து மக்களை முன்னேற விடாமால் அறிவை வளர விடாமால் தடுத்து கொண்டு இவர்கள் செய்யும் பாவங்களுக்கு யார் தண்டனை கொடுப்பது
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
25-ஜன-201313:48:03 IST Report Abuse
மதுரை விருமாண்டிஇந்த மாதிரி சில்லறை விசயத்துக்கெல்லாம் கடவுள் இறங்கி வரமாட்டார்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்