ஆமதாபாத்: ""நரேந்திர மோடியின் துணிச்சலான நடவடிக்கைகளால், வளர்ச்சிப் பணிகளில், குஜராத் மாநிலம், மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது,'' என, மாநில கவர்னர்,கமலா பெனிவால்,பாராட்டு தெரிவித்துள்ளார்.
குஜராத்தில்,நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கமலா பெனிவால், கவர்னராக உள்ளார். இருவருக்கும் இடையே, பல்வேறு பிரச்னைகளில் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. லோக்ஆயுக்தா நீதிபதி நியமனம் தொடர்பாக, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.ஒருவர் மீது, ஒருவர், பரஸ்பரம் புகார் கூறி வந்தனர். "கவர்னர், கமலா பெனிவால், காங்கிரஸ் கட்சியின், கைப்பாவையாக செயல்படுகிறார்' என, நரேந்திர மோடி கூறியிருந்தார். இந்நிலையில், குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடந்தபின், கூடிய முதல் சட்டசபை கூட்டத் தொடரில், கவர்னர் கமலா பெனிவால், உரை நிகழ்த்தினார். அப்போது, நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையை, அவர் வெகுவாக பாராட்டினார்.கவர்னர் கமலா பெனிவால் பேசியதாவது:குஜராத் மாநிலம், வளர்ச்சிப் பணிகளில், தற்போது மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறது. இங்கு, பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதல்வர் நரேந்திர மோடியின், துணிச்சலான நிர்வாக திறமையே, இதற்கு காரணம்.நரேந்திர மோடியின் நிர்வாக திறமைக்கு, சான்றிதழ் அளிக்கும் வகையில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை, குஜராத் மக்கள், மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ள மோடிக்கும், இந்த தேர்தலில் வெற்றி பெற்ற, மற்ற உறுப்பினர்களுக்கும், என் வாழ்த்துக்கள்.மேலும், நரேந்திர மோடி, சமீபத்தில் மேற்கொண்ட யாத்திரை, மாநிலத்தில், அமைதியையும், ஒற்றுமையையும் நிலைநாட்டியுள்ளது.இவ்வாறு, கமலா பெனிவால் பேசினார்.நரேந்திர மோடியை, குஜராத் கவர்னர் பாராட்டி பேசியுள்ளது, குஜராத் அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திஉள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வேறு வழி இல்லாமல் சட்டசபையில் புகழ்ந்து இருக்கிறார். . . . . .அவரின் செயல் பாடுகலெல்லாம் காங்கிரஸ் ஆட்டுவித்தலின் படி தான் . . . . . .மாநில அரசை அடக்க மத்திய அரசின் மோடி மஸ்தான் வேலை. . . . .நரேந்திர மோடியிடம் எடுபடாது அடுத்த பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தான். . . . .வாழ்க பாரதம் . . . . .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.