ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, டி.கிளியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், ஒரேயொரு மாணவி மட்டும் படித்து வருகிறார். இவருக்காக, தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள், ஒரு சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளியில், 2010-11ல், 11 குழந்தைகளும், 2011-12ல், ஏழு குழந்தைகளும் பயின்றனர். தற்போது ஒரு மாணவி மட்டுமே பயின்று வருகிறார்.டி.கிளியூர் கிராம மக்கள் கூறுகையில், "அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், சரிவர வருவதில்லை. கல்வித்தரம் மற்றும் குழந்தைகள் மீதான அக்கறை கருதி, வெளியூரில் உள்ள தனியார் பள்ளிகளில், குழந்தைகளை சேர்த்துள்ளோம்' என்றனர்.டி.கிளியூர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியா கூறியதாவது:கிராம மக்கள் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வருகிறோம். ஒரு மாணவி மட்டும், இப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.அவளுக்கு நானும், மற்றொரு ஆசிரியரும் நிறைவாக பாடம் நடத்தி வருகிறோம். ஒரு சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர், மாணவிக்கு சமையல் செய்து கொடுக்கின்றனர்,இவ்வாறு அவர் கூறினார்.உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அண்ணாதுரை கூறியதாவது:மாணவர் சேர்க்கைக்காக விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் பல நடத்தியும், வீடு, வீடாக பிரசாரம் செய்தும், இந்த பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டவில்லை.பள்ளியை மூடவும், ஆசிரியர்களை வேறு பள்ளிகளில் இடமாற்ற செய்ய, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அரசின் சிந்தனை இந்த பள்ளியை மூடுவதையன்றி இதனை ஒரு உதாரணமாகக்கொண்டு மற்ற பள்ளிகளையும் ஆய்வு செய்து தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகளே சிறந்தது எனும் விழிப்புணர்வை
பள்ளிகளின் கல்வி, விளையாட்டு, நேர்முறை மற்றும் செயல்முறை ஆகியவற்றை சிறப்பாக வடிவமைத்து தரத்தை உயர்த்தி மக்களிடம் செயல்முரையாகக்கொண்டு செல்ல முயலவேண்டும்.
முயன்றலேயன்றி தனியார் பள்ளியின் மோகத்திலிருந்து மக்கள் மீளுவதும் காலப்போக்கில் அரசு பள்ளிகளே சிறந்த பள்ளிகளென மக்கள் ஏற்றுகொள்வதும் உறுதி
தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகளில் ஊதியமும் சலுகைகளும் மிகவும் உயர்வு
அரசு பள்ளிகளில் கல்வியும், தரமும், மாணவர்களும் மற்றும் மதிப்பும் குறைவு
அரசின் முதற்க்கவனம் ஒரு தனியார் பள்ளியைவிட அங்கு உள்ள அரசு பள்ளியின் தாழ்வுக்கு காரணமென்ன (அரசா, ஆசிரியர்களா, பெற்றோர்களா, மாணவர்களா) என கல்வி அதிகாரிகளைக்கொண்டு ஆய்வெடுத்து ஆக்கமளிக்க வேண்டும்.
கல்வியானது அரசின் நேரடி பொறுப்பில் இருந்தால் வருங்காலம் சிறப்பாக இருக்கும்...
அரசின் முக்கிய கடமைகளில் மாணவர்களின் எதிர்காலம் தொலைநோக்கு பார்வையுடன் இருக்கவேண்டும்
தொலைந்து போன பார்வையாக இருக்க கூடாது...
படத்தில் பார்த்தாலே பள்ளியின் நிலை பரிதாபமாக இருக்கிறது. இதில் பெற்றோர் எப்படி தங்கள் பிள்ளைகளை சேர்க்க முன்வருவார்கள். சுத்தம், சுகாதாரம், ஒழுங்குமுறை, எவையும் இருப்பதாக தெரியவில்லை. அரசியல்வாதிகள் தங்கள் சொந்த பள்ளிகளின் சேர்க்கை பாதிக்கப்படா வண்ணம் சரியாக தங்கள் வேலைகளை செய்கிறார்கள். இவைகள் எக்கேடு கேட்டு போனால் என்ன. பெற்றோர் முயன்றால் மட்டுமே அரசுப்பள்ளிகளின் தேவைகள் தங்கள் கூட்டு முயற்சியால் நிறைவேற்றலாம். ஆனால் அவர்களுக்கு வாழ்க்கை வண்டி ஒட்டவே நேரம் போதவில்லை. ஆகவே பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்த்துவிட்டு தங்களின் பாதையில் ஓரளவு நிறைவோடு பயணிக்கிறார்கள். இங்கே பணம் காரணம் அல்ல. பொறுப்பெடுக்க அவகாசமும், நிதானமும், நேரமும் இல்லை என்பதே உண்மை. அரசுப்பள்ளிகள் மூடப்படலாம். ஆனால் அரசு நடத்தும் டாஸ்மார்க் மூடப்படக்கூடாது.
"அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், சரிவர வருவதில்லை. கல்வித்தரம் மற்றும் குழந்தைகள் மீதான அக்கறை கருதி, வெளியூரில் உள்ள தனியார் பள்ளிகளில், குழந்தைகளை சேர்த்துள்ளோம்" ம்ம் .மக்களின் அறியாமையை என்னவென்று சொல்ல.தங்கள்பகுதியில் தங்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் செயல்பாட்டை சீரமைக்க ஒன்றுபட்டு போராட முடியவில்லை.பின்னர் இவர்கள் சாதிக்கபோவதென்ன?மேலும் இவர்கள் அரசுப்பளிக்கு மாற்றாக தயார் பள்ளிகளை நாடி இருப்பது முற்றிலும் தவறான நடவடிக்கை.தாறுமாறாக விலை ஏற்றி விற்கிறார்கள் என குடிமக்கள் கூட போராடி நிலைமையை சீர் படுத்திவிட்டார்கள்.ஆனால் தங்களது குழந்தைகளின் கல்வி விசயத்தில் பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.இந்த கொடுமையை என்வென்று சொல்வது?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.