Vishwaroopam Banned : Rajini backs Kamal | “விஸ்வரூபத்திற்கு ரூ. 100 கோடி செலவு : கமல் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் ” - ரஜினி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

“விஸ்வரூபத்திற்கு ரூ. 100 கோடி செலவு : கமல் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் ” - ரஜினி

Updated : ஜன 25, 2013 | Added : ஜன 25, 2013 | கருத்துகள் (169)
Advertisement
“ விஸ்வரூபத்திற்கு ரூ. 100 கோடி செலவு : கமல் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் ” - ரஜினி

சென்னை : பிரமாண்டமாக உருவாக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கமல் 100 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். இதற்கு அவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என எண்ணிப்பார்க்க வேண்டும். இதனை நினைக்கும்போது மனம் கலங்குகிறது. கமலை தமக்கு 40 ஆண்டுக காலமாக தெரியும் என்றும் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றவர் கமல் என்றும், அவர் யாரு‌டைய மனதையும் புண்படுத்தும்படி நடந்து கொள்ள மாட்டார் என்றும், அவரது திரைப்படத்தை வெளியிட அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாவதாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திரைப்படத்திற்கு மாநில அரசு தடை விதித்தது. கேரளாவில் வெளியான படத்தை பார்க்க கூட்டம் அலைமோதியது. ஆனால் எவ்வித சச்சரவும் இல்லை. ஐதராபாத் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இருப்பதாக விமர்சனம் செய்துள்ளனர். பயங்கரவாதம், காதல் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.

விரைவில் வெளிவர துணை:


தமிழகத்தில் படம் திரையிடப்படவில்லை. கமல் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். தடை குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: என்னை வாழ வைக்கும் தமிழக தெய்வங்களான தமிழ் மக்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். விஸ்வரூபம் திரைப்படம் பிரச்னை குறித்து நான் வேதனை அடைகிறேன். 40 ஆண்டு கால நண்பர் கமல். இவர் யாரு‌டைய மக்களின் மனதை புண்படுத்தும் படியாக நடந்து கொள்ளாதவர் என நன்கு அறிவேன்.
இந்தப்படம் தணிக்கையான பின்னர் வெளியிடுவதற்கு முன்பாகவே இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு திரைப்படம் காண்பித்துள்ளார். இதிலிருந்தே இஸ்லாமிய மக்களின் மீது கமல் அவர்கள் கொண்டுள்ள மதிப்பையும், மரியாதையையும் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.


மகா கலைஞன் கமல்

: திரு கமலஹாசன் அவர்கள் இந்த திரைப்படம் தயாரிக்க சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு என்னென்ன சிரமங்கள் அநுபவித்திருக்கிறார் என்பதை அறியும் போது என் மனம் கலங்குகிறது. கமல் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்கு காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில் வைத்து இந்த படத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்ற கருத்தில் இருந்து மாறி கமல் வந்த பின்னர் கலந்து பேசி கதைக்கு பாதிப்பு வராத வகையில் படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு மிலாது நபி வாழ்த்துக்களுடன் இஸ்லாமிய சகோதரர்களை கேட்டு கொள்கிறேன். ஜெய் ஹிந்த்.,

இவ்வாறு அவர் கைப்பட எழுதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (169)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-ஜன-201303:45:26 IST Report Abuse
தமிழ்வேல் // அவரது திரைப்படத்தை வெளியிட அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். // இதை எப்படி எதிர்பார்க்க முடியும் ?
Rate this:
Share this comment
Cancel
RAJA - chennai,இந்தியா
29-ஜன-201311:11:07 IST Report Abuse
RAJA @Vaduvooraan // நண்பரே திரு கமல் எதுவும் செய்யவில்லை என்பதால் நானும் எதுவும் செய்ய மாட்டேன் என்பது நட்பு கிடையாது ,அது அவரின் குணம் இது இவரின் குணம் அவ்வளவுதான்
Rate this:
Share this comment
Cancel
babu - tiruchi,இந்தியா
28-ஜன-201303:08:11 IST Report Abuse
babu நம் நாத்திகம் பேசும் பகுதறறிவு அரசியல் வாதிகள் எப்பொழுது நோன்பு எடுக்கும் பொழுது மட்டும் சூப்பு சாப்பிட சென்று தங்கள் வாக்கு வங்கி கணக்கை ஆரம்பித்தார்களோ அன்றே தீவிர வாதிகள் நம்மை சூப்பு எடுத்து விட்டார்கள், இந்தியாவின் மீது கட்டு அவிழ்க்க படும் தீவிரவாதம் இந்தியாவின் வசிக்கும் இல்லிதவாயங்களையும் அதற்க்கு இங்கு அவர்களுக்கு ஆதரவு தரும் சில மத சார்பின்மை என்கிற கொள்கையால் தங்களுக்கு கிடைத்துள்ள ஆதாயத்தை வைத்து பேசும் யோக்கியமானவர்களையும் கருதி ஏற்படுவது தான் உண்மை, இங்கு ஒற்றுமை இருந்திருந்தால் இல்லை ஒற்றுமை உணர்வோடு தான் வாழ்கிறார்கள் எனபது ஊர்கிகம் என்றால் தீவிரவாதிகள் யார் என்றால் என்ன, ஆனால் மதம் அவர்களுக்கு ஒரு பாதுக்காப்பு போர்வையாக இருக்கிறது என்றால் இந்தியாவின் மத சார்பின்மை என்பது எவனும் புரிந்து கொள்ள வில்லை என்பது தான், கிடைத்த வரையில் ஆதாயம், இன்னும் இங்கு சாதுக்கல் பொங்க வில்லை, பொங்கி எழும் போது தான் பகுத்தறிவு அரசியல் வாதிகள் வாக்கு வங்கிகளை விட்டு ஓடும் காலம் வரும்,
Rate this:
Share this comment
Cancel
Hari - Chennai,இந்தியா
26-ஜன-201320:39:57 IST Report Abuse
Hari இந்துக்கள் வீதியில் வந்து போராடுவார்கலாம் ஹ ஹ ஹ ஹ ஹ எங்களை எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம்
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
26-ஜன-201320:13:12 IST Report Abuse
Sundeli Siththar இஸ்லாமிய நண்பர்களே... ரோஜா படத்தை ஒரு முறை பார்த்துவிட்டு இந்த படத்தை விமர்சனம் செய்யுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
26-ஜன-201320:12:31 IST Report Abuse
Sundeli Siththar கமல் சார்.. உங்களுக்கு படம் எடுக்கத் தெரியவில்லை. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு ஒரு குடுமி வைத்து, பூணூல் மாட்டி விட்டு, பஞ்சகச்சம் கட்டிவிட்டு, அவர்கள் சந்தியாவந்தனம் செய்து முடித்தபின் கையில் மிஷின் கன் எடுத்து போராடுவது போல காட்டியிருந்திருக்கலாம். உங்களின் மற்ற படங்களில் இந்த சமூகத்தினரை இழிவு படுத்துவது போல இதிலும் பண்ணியிருந்தால் படத்திற்கு எந்த எதிர்ப்பும் வந்திருக்காது.
Rate this:
Share this comment
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
26-ஜன-201318:31:23 IST Report Abuse
Shaikh Miyakkhan பணக்காரர் பணத்தை பற்றி தான் கவலை படுவார். காவிரில் கர்நாடக தண்ணீர் திறக்கவில்லை. அதனால் தஞ்சை, புஞ்சை கள் நஷ்டமானாலும் அதை பற்றி எல்லாம் கவலை படாதவர்,அதை பற்றி எந்த வாய் திறக்காத இந்த புண்ணியவான் தனக்கு நிகரான நடிகர் பணம் 100 கோடி வீணாக போய் விடுமோ என்ற கவலையில் இந்த கருத்தை தெரிவித்து உள்ளார். அப்படியானால் யாரும் யாரை பற்றியும் , எதை பற்றியும் எப்படி வேண்டுமானாலும் இஸ்டத்திற்கு எந்த விதமான் படங்களும் எடுக்கலாம் அப்படி தானே. ஒரு சமுதாயா மக்கள் பதிப்பு அடைந்தாலும் அதை பற்றி கவலை அடைய தேவை இல்லை அப்படி தானே ? வீக்கி லீக் பத்திரிக்கை சுட்டி காட்டிய படி இந்திய இஸ்லாமிய மக்கள் தீவிரவாத்தை விரும்பாதவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
26-ஜன-201317:33:38 IST Report Abuse
dori dori domakku dori கலாச்சாரங்களை வளர்க்க எவ்வளவு ஆண்டுகள், எத்தனை பெரியோர்கள் பாடு பட்டு இருப்பார். ஆனால் 2 மணி நேர படத்தின் மூலம் நீங்கள் எப்படி சீர் அழிகின்றீர்கள். அதன் வலியும், வேதனையும் அறியுங்கள் முதலில். பிறகு கமல் புராணம் பாடலாம் . முஸ்லீம் சகோதரர்களின் இப்போராட்டத்தினால், எல்லா முகதிரைகளும் கிழிகின்றன. அதுவரைக்கும் அவர்களுக்கு நன்றி
Rate this:
Share this comment
Cancel
பழவள்ளி - Kolkata,கத்தார்
26-ஜன-201317:19:30 IST Report Abuse
பழவள்ளி Where did all the heroes [with "Puratchi / Makkal / Thalai ....etc" titles who show their muscle power and biceps in the films, taking evil head on] go? They do not have the guts even to take a stand? (either support their colleague or stand by the other party)? Shame on them..................................................
Rate this:
Share this comment
Cancel
பழவள்ளி - Kolkata,கத்தார்
26-ஜன-201316:40:34 IST Report Abuse
பழவள்ளி 1. So Rajinikant took so many days to come out in favor of Kamal, with his carefully worded statement, "requesting" religious groups to reconsider their stand. He does not have the courage to state his stand one way or other clearly. 2. And now everyone has started claiming what a great artist Kamal is.........forgetting that Kamal himself said that he was a businessman and that his film is his merchandise. 3. By the way, would Kamal remember the way Hindu Gods were depicted in his movies "Kadhala Kadhala"?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை