பா.ஜ., முன்னாள் தலைவர் நிதின் கட்காரி: காங்கிரஸ் கப்பல் மூழ்கப் போகிறது. அக்கட்சியின் ஆட்டம் முடிய போகிறது. அடுத்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சி அமைக்க போகிறது. அப்போது, எனக்கு எதிராக சதியில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகளை காப்பாற்ற சோனியாவோ, சிதம்பரமோ வரமாட்டார்கள்.
டவுட் தனபாலு: கட்சி தலைவர் பதவி பறி போனதும், லோக்கல் தாதா ரேஞ்சுக்கு இறங்கி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களே... அது சரி... எங்க ஊர் தலைவர் கருணாநிதி தான், எதிர்க்கட்சியா இருக்கும்போது, "நாங்க ஆட்சிக்கு வந்தா, எங்க மேல வழக்கு போட்ட போலீசார், அதுக்கு பதில் சொல்லணும்'னு மிரட்டுவாரு... அதையெல்லாம் படிச்சோ, கேள்விப்பட்டோ தான், நீங்களும் அதே பாணியிலேயே பேசுறீங்களோன்னு, எனக்கு, "டவுட்!'
பத்திரிகை செய்தி: தமிழக காங்கிரஸில், தன்னிச்சையாக ஒரு கோஷ்டி துவக்கியுள்ள, "ராகுல் மக்கள் சேவகர் பேரவை'க்கு, சென்னையில் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தி, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
டவுட் தனபாலு: அது சரி... கட்சியில இனிமே ராகுல் தான் எல்லாம்கிறதால, அவர் பேர்ல, பேரவை ஆரம்பிச்சிட்டாங்களோ... ராகுலுக்கு எதிரி, பா.ஜ.,வோ, மோடியோ இல்லை... இந்த மாதிரி, உள்கட்சி, "துதிபாடிகள்'தான்கிறதுல, எனக்கு, "டவுட்'டே இல்லை...!
நடிகர் கமல்ஹாசன்: "விஸ்வரூபம்' படத்துக்கு எதிரான தடையை சட்டப்படி சந்திப்பேன். இதுபோன்ற கலாச்சார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இணையதளம் வாயிலாக எனக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி.
டவுட் தனபாலு: உள்ளூர் அரசியல் முதல், உலக அரசியல் வரை தெரிஞ்சவர் நீங்க... இப்படி எல்லாம் பிரச்னை வரும்கிறது உங்களுக்கு முன்னாடியே தெரியாதா அல்லது இப்படி பிரச்னை வந்து, அதன் மூலமா, படத்துக்கு, இலவச விளம்பரம் கிடைக்கணும்னு நினைச்சுட்டீங்களான்னு தான், எனக்கு, "டவுட்!'
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கமல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு முன்னரே படம் போட்டு காண்பித்தபோது ஆட்சேபனை தெரிவிக்காதவர்கள் இப்போது ஆட்சேபனை மனுவை கொடுத்தவுடன் தமிழகரசு படத்தை பார்க்காமலேயே தடை போட்டது உள்ளடி , உள்குத்து அரசியல்( வேலைகள் )இருப்பது போல எண்ணத்தோன்றுகிறது . மத்திய சென்சார் அனுமதிக்குபின், தமிழகரசு எவ்வாறு தடை போடலாம். சம்பந்தபட்டவர்கள் சென்சார் போர்டில் முறையிடாமல் குறுக்கு வழியில் தமிழகரசு கமலு படத்துக்கு எதிராக உடனடி தடை என்பது, ரஜனியை முன்னர் படிய வைக்க நடந்த சூழ்ச்சிகள் போல தெரிகிறது. மேலும் போலீஸு, வக்கீல் , டாக்டர் போன்றவர்களின் பணியினை விமர்சித்து கிண்டல் செய்தும் வரும் படங்களை ஆட்சேபித்தால் ஜெயா அரசு உடனடி தடைபோடும என்ற கேள்வி எழுகின்றது ? ,

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.